முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » வாழ்க்கையில் முன்னேற புத்திசாலித்தனம் வேண்டும்
ஜென் கதைகள் - வாழ்க்கையில் முன்னேற புத்திசாலித்தனம் வேண்டும்

ஒரு ஊரில் ஜென் துறவி ஒருவர் மடாலயத்தில் வாழ்ந்து வந்தார். அதே ஊரில் மடாலயத்திற்கு அருகில் கண்பார்வை இல்லாத ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்போதும் கடவுளை வணங்கும் போது "கடவுளே! என்னை இப்படி கண்பார்வை இல்லாமல் படைத்துவிட்டாயே. உனக்கு கண்ணே இல்லையா?" என்று புலம்பி கொண்டே இருந்தார். அப்போது குரு அவரது பிரார்த்தனையை கேட்டு, அவனை காணச் சென்றார்.
பின் அவனிடம் "இப்போது கடவுள் உன் முன் வந்து, உன்னிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், என்ன கேட்பாய்? அதுவும் ஒரே ஒரு வரம் தான் கொடுப்பேன் என்று கேட்டால், என்ன கேட்பாய்?" என்று கேட்டார்.
அதற்கு அவன் சிறிது நேரம் யோசித்து, பின் அவரிடம் "ஒரு பெரிய ராஜ மாளிகையில், எனது மனைவி என் மகனுக்கு வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டுவதை, எனது வீட்டின் ஐந்தாவது மாடியிலிருந்து பார்த்து சந்தோஷப்பட வேண்டும்" என்று கேட்பேன்.
அதைக் கேட்ட குருவிற்கு அவனது புத்திசாலித்தனமான பதிலைப் பார்த்து, "நீ வாழ்க்கையில் உன் புத்திசாலித்தனத்தால் விரைவில் முன்னேறிவிடுவாய்" என்று சொல்லி தன்னுடைய சீடனாக வைத்துக் கொண்டார்.
ஏனெனில் அவன் ஒரே வரத்தில் தனக்கு பார்வை வேண்டும், பெரிய ஐந்து மாடி மாளிகை வேண்டும், பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும் என்று கேட்டுவிட்டான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாழ்க்கையில் முன்னேற புத்திசாலித்தனம் வேண்டும் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", வேண்டும், பெரிய, என்ன, அவன்