முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » அனைத்துமே புத்த போதனைக்கு சமமானவை தான்!!!
ஜென் கதைகள் - அனைத்துமே புத்த போதனைக்கு சமமானவை தான்!!!
பல்கலைக்கழக மாணவன் ஒருவன், கசன் என்கின்ற ஜென் துறவியை பார்க்கச் சென்றான். அப்போது அவரிடம் "நீங்கள் எப்போதாவது கிரிஸ்துவர் பைபிளைப் படித்ததுண்டா?" என்று கேட்டான். அதற்கு அந்த துறவியும் "இல்லை. எங்கே, அதை எனக்கு படித்து காட்டு" என்றார். அந்த மாணவனும் உடனே தன்னிடம் இருந்த பைபிளைத் திறந்து செயின்ட் மத்யு-வின் வாசகத்தை வாசித்தான்.
அந்த பைபிள் வாசகத்தில் ஒன்றான: "என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள். ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கும் போது நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?....
உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;
என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிகம் நிச்சயமல்லவா?
ஆகையால் நாளைக்காக கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்." என்று படித்து முடித்தான்.
உடனே அந்த துறவி "எவனொருவன் இந்த வார்த்தைகளை கடைபிடிக்கிறானோ, அவன் பெரும் ஞானம் கொண்டவனாவான்" என்று கூறினார்.
மேலும் அந்த மாணவன் மறுமுறை அந்த பைபிளில் மற்றொரு வாக்கியத்தைப் படித்தான். அந்த வாசகம் என்னவென்றால் "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்." என்பதாகும்.
இந்த வாசகத்தைக் கேட்டதும் துறவி "அருமை. இதைத் தான் புத்த போதனையிலும் சொல்லப்படுகிறது. ஆகவே இந்த உலகில் எதுவும் புத்த போதனையை விட அப்பாற்பட்டது அல்ல. அனைத்தும் புத்த போதனைக்கு நெருங்கினவை தான்" என்று குறிப்பிட்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அனைத்துமே புத்த போதனைக்கு சமமானவை தான்!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", அந்த, புத்த, அப்பொழுது, உங்கள், நீங்கள்