ஜென் கதைகள் - மடி அல்லது நீந்தி வெல்
ஒரு முறை ஹகுயன் என்கின்ற ஜென் துறவி அவரது சிஷ்யர்களிடம் "ஒருவன் கடினமான செயல்களை சுலபமாக செய்வது எப்படி?" என்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அதனை விளக்குவதற்காக ஒரு கதையை கூறினார்.
அது என்னவென்றால் "ஒரு திருடனின் மகன் அவன் தந்தையிடம் தனக்கும் திருடுவதில் உள்ள ரகசியங்களை கற்று தர கேட்டான். அவனுடைய தந்தையும் அதற்கு ஒப்புக்கொண்டு அன்று இரவு ஒரு பெரிய மாளிகைக்கு திருடுவதற்காக அவனை அழைத்து சென்றான். அந்த வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் உறங்கி கொண்டிருக்கையில், திருடன் அவன் மகனை துணிகள் நிறைந்த அறைக்குள் அழைத்து சென்றான். மகனிடம் அங்குள்ள துணிகளை திருட சொன்னான். அவனுடைய மகனும் தந்தையின் சொல் படி திருடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவனின் தந்தை மெதுவாக அறையின் வெளியே வந்து, பின் அவனை உள்ளே வைத்து பூட்டினான்.
பின்பு வீட்டில் உள்ளோரை எழுப்புவதற்காக, அந்த வீட்டின் வெளிப்புறம் வந்து கதவை தட்டிவிட்டு, வேகமாக தப்பி வீட்டிற்கு ஓடிவிட்டான். சிறிது நேரம் கழித்து, அவனது மகனும் வீடு திரும்பினான். பிறகு அழுது கொண்டே அவனுடைய தந்தையிடம் "அப்பா ஏன் அப்படி செய்தீர்கள்? நான் எதையும் திருடவில்லை, தப்பிப்பதற்கு என்ன வழி என்று என் புத்தி கூர்மையை செயல்படுத்துவதிலேயே நேரம் அனைத்தும் போயிற்று" என்று கதறி அழுதான்.
அவனது தந்தையும் சிரித்து கொண்டே "மகனே, நீ கொள்ளை கலையில் முதல் பாடத்தை கற்று கொண்டாய்" என்று கூறினான் என்று சொல்லி முடித்தார்.
பிறகு சிஷ்யர்களிடம் இதைத் தான் மடிவது அல்லது நீந்துவது என்ற முறை என்பர். மேலும் "பயம் கொண்ட நிலையில், எவரொருவரும் செய்ய முடியாத காரியங்களையும் அவர்கள் தங்கள் வலிமை கொண்டு செய்து முடிப்பர். ஒருவரின் சொந்த அனுபவத்தினால் மட்டுமே எந்த ஒரு கடினமான செயலையும் எளிதில் செய்ய கற்று கொள்வது என்பது சாத்தியம்" என்று சொல்லி உணர்த்தினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மடி அல்லது நீந்தி வெல் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", அந்த, கற்று, அவனுடைய