ஜென் கதைகள் - ஒரே ஒரு ஸ்வரம்
ஜப்பானில் வசித்த காகுவா சைனாவிற்கு சென்று சா'ன் போதனைகளைக் கற்றான். சைனாவில் இருந்த போது தியானம் மட்டுமே குறிக்கோளாக கொண்டவன், வெளியிடங்களுக்கு எங்கும் பயணம் செய்தது கிடையாது. மலையின் மீதிருந்த ஓரிடத்தில் தனிமையில் வசித்து வந்தான். யாரவது அவனைச் சந்தித்து தங்களுக்கு சா'ன் பற்றி உபதேசிக்குமாறு கூறினால், அவர்களிடத்தில் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அந்த மலையிலேயே வேறு யாரும் வராத வேறு ஒரு இடத்தினைத் தேர்ந்தெடுத்து சென்று விடுவான்.
முதல் முதலாக காகுவாதான் ஜப்பானிலிருந்து சைனாவிற்கு சென்று ஸென்னினைக் கற்றான். இருந்த போதிலும் காகுவா ஸென்னைப் பற்றிக் கற்றுக் கொடுத்ததாகவோ அல்லது ஸென்னைப் பற்றி குறைந்த பட்சம் ஒரு சிறிய கட்டுரை எழுதியதாகவோ ஒரு குறிப்பும் இல்லை. அதனால் காகுவா ஸென்னினை ஜப்பானிற்கு கொண்டு வந்தவர்களில் ஒருவனாக யாரும் கருதுவதுவதில்லை.
அவனுடைய வாழ்வில் நடந்த ஒரெ ஒரு நிகழ்ச்சியாக மக்களுக்கு நினைவுக்கு வருவதே இன்றைய ஸென் கதை.
சைனாவிலிருந்து காகுவா ஜப்பானிற்கு வந்தவுடன், ஜப்பானின் அரசர் அவனை இராஜசபைக்கு வந்து ஸென்னைப் பற்றி மக்களுக்கும் தனக்கும் உபதேசிக்குமாறு கேட்டுக் கொண்டார். அரச சபைக்கு வந்த காகுவா எதுவுமே பேசவில்லை. தன்னுடைய மேலங்கியின் மடிப்பில் மறைந்து இருந்த புல்லாங்குழல் ஒன்றினை வெளியே எடுத்தான், எடுத்தவன் அதில் வாயை வைத்து ஒரே ஒரு சிறிய ஸ்வரத்தினை சுருக்கமாக ஒரேயொரு முறை ஊதினான், பின்பு மன்னரை குனிந்து வணங்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
மன்னருடைய அரச சபையில் அன்று பார்த்தவர்கள், காகுவாவினை அதன் பின்பு பார்க்கவே இல்லை. எங்கோ கண் கானத இடத்திற்கு சென்று யார் கண்ணிலும் படாமல் மறைந்து விட்டான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒரே ஒரு ஸ்வரம் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - காகுவா, சென்று, ஸென்னைப், இருந்த, பற்றி