ஜென் கதைகள் - நானில்லை நீயில்லை
இன்று ஸென் ஆசிரியர் ஒருவருக்கும் அவரது சீடனுக்கும் நடந்த சுவரசியமான உரையாடலைக் கவனிப்போம்.
சீடன்: "உண்மையான வழி எது?" என்று ஸென் ஆசிரியரிடம் நிஜமாகவே தெரிந்து கொள்ளும் ஆவலுடன் சுவராசியத்துடன் கேட்டான்.
ஆசிரியர்: "அது உன்னுடைய கண்களுக்கு எதிரிலேயே உள்ளது" என்றார் சீடனைப் பார்த்து.
சீடன்: "ஏன் என்னால அதனைப் பார்க்க முடியவில்லை?"
ஆசிரியர்: "ஏனென்றால், நீ உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாய்"
சீடன்: "அப்படின்னா, உங்களால் பார்க்க முடியுதா?"
ஆசிரியர்: "நீ எதுவரை 'உங்களால் முடியும்', 'என்னால் முடியாது' என்று இரு தோற்ற மயக்கங்களைப் பற்றி சொல்லிக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறாயோ, அதுவரை உன்னுடைய கண்களானது கட்டப் பட்டே இருக்கிறது"
சீடன் ஏதோ புரிந்து கொண்டவனாக " 'நான்','நீ' என்ற பாகு படித்தி பார்க்காத போது யார் ஒருவராலும் பார்க்க முடியுமா?"
ஆசிரியர்: " 'நானோ', 'நீயோ' இல்லாத போது யாரது பார்க்க விரும்புவது?"
தேடல் தொடர்பான தகவல்கள்:
நானில்லை நீயில்லை - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - strong>, ", ஆசிரியர், பார்க்க, சீடன்