முதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்திய வரலாறு » வரலாற்றுக்கு முந்தைய இந்தியா » வேதக் காலப் பண்பாடு » பிந்தைய வேதகாலம்
பிந்தைய வேதகாலம் (Later Vedic Period)
அரசியல் நிலை
பிந்தைய வேத காலத்தில் பெரிய அரசுகள் தோன்றியதை ஏற்கனவே குறிப்பிட்டோம். இக்காலத்தில் பல குலங்கள் அல்லது 'ஜன'ங்கள் ஒன்றிணைந்து 'ஜனபதங்கள்' உருவாயின. அரசின் பரப்பளவு பெருகியதால் அரசரின் அதிகாரமும் அதிகரித்தது. தனது வலிமையைப் பெருக்கும் நோக்கத்துடன் அரசர் பல்வேறு சடங்குகளையும், வேள்விகளையும் செய்தார். ராஜசூயம் (முடிசூட்டு விழா) அஸ்வமேதம் (குதிரை வேள்வி) மற்றும் வாஜபேயம் (தேர்ப் போட்டி) ஆகியனவும் இவற்றுள் அடங்கும். ராஜ விஸ்வஜனன், அகில புவனபதி, ஏகரதன், சாம்ராட் போன்ற பட்டங்களையும் அரசன் சூட்டிக் கொண்டான்.
புரோகிதர், சேனானி, கிராமணி தவிர பிந்தைய வேத காலத்தில் மேலும் பல புதிய அதிகாரிகள் ஆட்சித் துறையில் பங்கு வகித்தனர். கருவூல அதிகாரி, வரிதண்டுவோர், அரச தூதர் ஆகியோரும் இதிலடங்கும். கிராம சபைகள் உள்ளாட்சி அமைப்புகளில் அங்கம் வகித்தன. பிந்தைய வேத காலத்தில் 'சபா', 'சமிதி' என்ற அவைகள் செல்வாக்கிழந்தன.
பொருளாதார நிலை
பிந்தைய வேதகாலம் |
'கணங்கள்' எனப்பட்ட வாணிகக் குழுக்களை அவர்கள் அமைத்துக் கொண்டனர். ரிக்வேத காலத்திலிருந்த 'நிஷ்கம்' என்ற நாணயம் தவிர, சதமானம், கிருஷ்ணலம் என்றழைக்கப்பட்ட தங்க வெள்ளி நாணயங்களும் செலாவணியாக புழக்கத்திலிருந்தன.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிந்தைய வேதகாலம் (Later Vedic Period), பிந்தைய, அரசுகள், வரலாறு, இந்தியா, இந்திய, அரசர், வேதகாலம், காலத்தில், குரு, மேலும், தவிர, பல்வேறு, இக்காலத்தில், வளர்ச்சியடைந்தன, அங்கம், நிலை, குலங்கள், வேதகாலத்தில், ஆரியர்கள், இலக்கியங்களில், அரசின், புகழ்மிக்க