முதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்திய வரலாறு » வரலாற்றுக்கு முந்தைய இந்தியா » வேதக் காலப் பண்பாடு » பிந்தைய வேதகாலம்
பிந்தைய வேதகாலம் (Later Vedic Period)
பிந்தைய வேத காலத்தில் சமூகத்தின் நான்கு முக்கிய பிரிவுகளான பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியன் நன்கு வேரூன்றியது. வைசியருக்கும் குத்திரருக்கும் மறுக்கப்பட்ட பல்வேறு சலுகைகளை பிராமணர்களும் ஷத்திரியர்களும் அனுபவித்து வந்தனர். ஷத்திரியரைவிட பிராமணரே உயர்ந்த நிலையில் இருந்தபோதிலும், சில வேளைகளில் ஷத்திரியர்கள் பிராமணர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் கூறிக்கொண்டனர். தாங்கள் மேற்கொண்ட தொழிலின் அடிப்படையில் பல்வேறு கிளை ஜாதிகளும் இக்காலத்தில் தோன்றின. குடும்பத்தைப் பொறுத்தவரை பிந்தைய வேதகாலத்தில் தாயைவிட தகப்பனின் செல்வாக்கு உயரத் தொடங்கியது. மகளிர் நிலையில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. ஆண்களுக்கு கீழ்ப்படிந்தவர்களாகவே பெண்கள் சுருதப்பட்டனர். அவைகளில் பங்கெடுத்துக் கொள்ளுதல் போன்ற அரசியல் உரிமைசுளையும்கூட பெண்கள் இழந்தனர். சிறார் மணம் பரவலாக வழக்கத்திலிருந்தது. அய்த்ரேய பிராமணம் என்ற நூல், பெண் குழந்தை குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம் என்று குறிப்பிடுகிறது. அரச குடும்பத்தில் மட்டும் பெண்கள் ஒருசில சலுகைகளைப் பெற்று வாழ்ந்தனர்.
சமயம்
முந்தைய வேதகாலக் கடவுளரான இந்திரனும் அக்னியும் பிந்தைய வேத காலத்தில் செல்வாக்கிழந்தனர். பிந்தைய வேதகாலத்தில் பிரஜாபதி (படைப்புக் கடவுள்) விஷ்ணு (காக்கும் கடவுள்), ருத்ரன் (அழிக்கும் கடவுள்) ஆகிய கடவுளர் முக்கியத்துவம் பெற்றனர். வேள்விகள் மேலும் தீவிரமாக பின்பற்றப்பட்டதோடு பல்வேறு சடங்குகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. வழிபாட்டின் முக்கியத்துவம் குறைந்து வேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. பூசாரித் தொழில் நன்கு முறைப்படுத்தப்பட்டதோடு பரம்பரைத் தொழிலாகவும் மாறியது. வேள்விகளுக்கான ஒழுங்கு முறைகள் அவர்களால் ஏற்படுத்தப்பட்டன. எனவ பிந்தைய வேத காலத்தின் இறுதிப் பகுதியில் பூசாரிகளின் ஆதிக்கத்துக்கும், வேள்விகள் மற்றும் சடங்குகளுக்கும் பலத்த எதிர்ப்புகள் தோன்றின. இத்தகைய வேள்விகளுக்கு எதிராக தோன்றியதே புத்த, சமண சமயங்களாகும். இந்து தத்துவத்தின் சாரமாக விளங்கும் உபநிடதங்கள் பயனில்லாத இத்தகைய வேள்விகளை ஆதரிக்கவில்லை. ஞானம் என்ற உண்மையான அறிவைப் பெறுவதன் மூலமே மோட்சத்தை அடையமுடியும் என அவை வலியுறுத்தின.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிந்தைய வேதகாலம் (Later Vedic Period), பிந்தைய, வரலாறு, இந்திய, முக்கியத்துவம், வேதகாலம், பெண்கள், பல்வேறு, கடவுள், வேள்விகளுக்கு, இத்தகைய, வேதகாலத்தில், வேள்விகள், நிலையில், காலத்தில், இந்தியா, ஷத்திரியர்கள், நன்கு, தாங்கள், தோன்றின