முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » நீதிக் கதைகள் » ஈசாப் நீதிக் கதைகள் » நாய்களும் மாட்டுத் தோலும்
ஈசாப் நீதிக் கதைகள் - நாய்களும் மாட்டுத் தோலும்
காட்டுக்குள் சில நாய்கள் பசியோடு இரை தேடிக் கொண்டிருந்தன. அப்போது ஆற்றில் ஒரு மாட்டின் தோல் மிதப்பதை அவை பார்த்தன.
உடனே தண்ணீரில் இறங்கி அந்தத் தோலை கவ்வ முயன்றன. ஆனால், தண்ணீர் நிறைய இருந்ததால் அது முடியவில்லை.
உடனே, ஆற்றில் ஓடும் தண்ணீரை எல்லாம் குடித்துவிட்டால் அந்தத் தோலை எடுப்பது எளிதாக இருக்கும் என அந்த நாய்கள் நினைத்தன. உடனே, எல்லா நாய்களும் சேர்ந்து தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தன.
ஆனால், ஆற்று நீர் முழுவதையும் குடிக்க முடியுமா? ஆனால், அவை மேலும் மேலும் குடிக்க, அவற்றின் வயிறு வெடித்து இறந்துபோயின.
நீதி: அடையவே முடியாததை முயற்சிக்கவே கூடாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாய்களும் மாட்டுத் தோலும் - ஈசாப் நீதிக் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - குடிக்க, உடனே