ஈசாப் நீதிக் கதைகள் - ஜூபிடரும் தேனீயும்
தேனீ ஒன்று ஜூபிடரைச் சந்தித்து ஒரு பானை நிறைய சுத்தமான, சுவை மிகுந்த தேனை கொடுத்தது. கடவுளரான ஜூபிடரும் அதை அன்போடு வாங்கிக் கொண்டார். தேனீயின் அன்பால் மகிழ்ந்த அவர், தேனீ கேட்கும் வரத்தைத் தருவதாகவும் சொன்னார்.
தேனீ உடனே, தான் கொட்டியவுடன் மரணம் சம்பவிக்க வேண்டும் என்று வரம் கேட்டது.
தேனீ இப்படி மோசமான வரத்தைக் கேட்டதில் ஜூபிடர் கோபமடைந்தார். தேனீயின் கருணையில் பிற உயிரினங்கள் வாழ்வதா என்றும் யோசித்தார்.
பிறகு, தேனீ கேட்ட வரத்தைத் தருவதாகவும் ஆனால் அவை ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்றும் சொன்னார் ஜூபிடர்.
"ஏன்?" என்று கேட்டது தேனீ.
"நீ யாரைக் கொட்டினாலும் மரணம் சம்பவிக்கும். அவர்களுக்கல்ல, உனக்கு" என்றார் ஜூபிடர்.
நீதி: தீய எண்ணம் தீமையையே கொண்டுவரும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜூபிடரும் தேனீயும் - ஈசாப் நீதிக் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - தேனீ, ", ஜூபிடர்