ஈசாப் நீதிக் கதைகள் - ஜூபிடரும் ஒட்டகமும்
கடவுளான ஜுபிடரிடம் ஒரு நாள் ஒட்டகம் ஒன்று வந்து புலம்ப ஆரம்பித்தது. "மற்ற மிருகங்களோடு ஒப்பிட்டால் என்னைப் பாதுகாத்துக் கொள்ளவோ, யாரையும் தாக்கவோ எதுவுமே எனக்கு நீங்கள் தரவில்லை" என்றது ஒட்டகம்.
"காளை மாட்டுக்கு கொம்பகள் இருக்கின்றன. கரடிக்கு நீண்ட பற்கள்; சிங்கத்திற்கும் புலிக்கும் வலிமையான நகங்கள். இதனால், எல்லா மிருகங்களும் இவற்றைப் பார்த்து அஞ்சுகின்றன. மரியாதை தருகின்றன. ஆனால், என்னிடம் எதுவுமே இல்லாததால், போகிறவர் வருகிறவர் எல்லாம் என்னை அவமானப்படுத்துகிறார்கள்" என்று புகார் செய்தது.
ஜூபிடருக்குக் கோபம் வந்தது. "கொஞ்சமாவது யோசனையிருந்தால், மற்ற மிருகங்கள் எதற்குமே இல்லாத பலம் உனக்கு இருப்பது புரிந்திருக்கும். முட்டாள்தனமாக என்னிடம் வந்து புகார் செய்ததால், உன் காதுகள் சின்னதாகப் போகட்டும்" என்று கூறிவிட்டார் ஜூபிடர்.
நீதி: எது தனக்குச் சிறந்தது என தன்னை மட்டுமே வைத்து சிந்திப்பவர்களுக்கு தெரியாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜூபிடரும் ஒட்டகமும் - ஈசாப் நீதிக் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - "