24 சதயம் - நட்சத்திர ஆருடம்
24 சதயம் வந்ததால்..
கலங்காதே சதயமது உதயமானால் காணாத பொருள்களெல்லாம் கருத்தாய் கிட்டும் நிலவளமும் மாடுமனை கொள்ள நன்றாம் நீனிலத்தில் பயிர்செழிக்கும் தனமுமோங்கும் பலபலவாய் எண்ணமெல்லாம் பலிதமாகும். பலமான உத்யோகம் கிடைக்குமப்பா நலமான காரியங்கள் நடக்கலாகும் நாளுக்கு நாள் குடும்பம் தழைக்குமாமே! |
பொருள்: சதயம் ஆரூடமானதால், கனவில் கண்ட பொருளானாலும், நிஜத்தில் கிட்டும். நில வளமும், மாடு- ஆடு விலைகொள்ள, பால் பாக்கியமும், மனை விலை கொள்ள விருத்திகரமும், தான்ய விளைவும் தன லாபமும், உத்தியோக மேன்மையும், குடும்பத்தில் பலவிதமான நற்காரியங்களும் கைகூடும். நோய்கள் நீங்கும். எந்தவிதமான நல்ல எண்ணமும் நினைத்தபோதில் தடையின்றிப் பலிதமாகும். நாளுக்கு நாள் குடும்பக் கவலைகளும் நீங்கும். இது உத்தமம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
24 சதயம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்