8. பூசம் - நட்சத்திர ஆருடம்
8. பூசம் வந்ததால்..
கழித்திடுவாய் இருபத்து ஏழு நாளில் களிப்புண்டு ஆரூடம் பூசமானால் பழித்தவரும் இழித்தவரும் தோற்றுப்போவார் பகைத்தவரும் நகைத்தவரும் உறவேயாவார் தழைத்திடவே குடும்பமதில் சுபமே கூடும் தந்தை பொருள் கிடைக்கும் நோயும் நீங்கும் தொழில் முறையும் விர்த்தியுண்டு மேற்கோபமுண்டு தோன்றுமுந்தன் குலதெய்வத்தால் சுகமுண்டாமே |
பொருள்: எண்ணிய எண்ணம் இடையூறின்றிப் பலிதமாகும். உன்னை அழிக்க நினைப்பவர்களும் இழிவாகப் பேசியவர்களும் தோல்வி அடைவார்கள்.
பகையாளி உன்னைக் கண்டால் அச்சப்படுவார். தற்போது உனக்கு சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பதால், அதிர்ஷ்டவசமான பொருள்களெல்லாம் கிடைக்கும். சுபம் உண்டாகும், நோய் நீங்கும். மேற்கு திசையிலே லாபம் உண்டு. தொழில் விருத்தியாகும். அதேநேரம், வீட்டில் குலதெய்வங்களை வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்துவர, 27-நாட்களில் உன் கஷ்டங்கள் நீங்கும். இது உத்தமம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
8. பூசம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்