ஜோதிடம் குறிப்புகள் - கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்!

அவிட்டம் 3, 4, பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3- பாதங்களில் பிறந்த கும்பராசிக்காரர்கள், மெலிந்த திரேகத்துடனும், குள்ளமாகவும் இருப்பார்கள். கல்வியில் ஊக்கமும் ஆசார அனுஷ்டானங்களில் பற்றுதலும், தெய்வீக வழிபாடுகளில் சிறந்தும் இருப்பார்கள். எவ்வளவு படித்திருந்தாலும் மேதைகளாக இருந்தாலும், பிரபலமாக அமைவது கடினம். சுபக்கிரகப் பார்வை பெற்ற கும்பராசிக்காரர்கள் கீர்த்தி பெறலாம்.பித்த சம்பந்தமான வியாதிகளுடனும், மற்றவர்களிடம் காணும் சிறு குற்றம் குறைகளையும் அடிக்கடி இழிவாகப் பேசி, பிரசாரம் செய்து வருவார்கள். தன்னைப்பற்றி பெருமையாகத் தாங்களே பேசிக் கொள்வார்கள்.
கும்பராசியில் பிறந்தவர்கள் மற்றவர்கள் செய்த உபகாரங்களை உடனே மறந்துவிடுவார்கள். பாரபக்ஷம் பார்க்காமல் உடனே தீங்கு செய்வார்கள். பிறர் நன்றாக வாழ்வதைக் கண்டு பொறுக்கமாட்டார்கள்.
கும்பராசியில் பிறந்தவர்கள் ஸ்திரீ ஜனங்களின் நட்பை வெகு எளிதில் பெற்றுவிடுவார்கள். கிரஹங்களின் பலங்களுடன் பிறக்கும் கும்பராசிக்காரர்கள் 80 ஆண்டுகள் ஜீவித்திருப்பார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்! - ஜோதிடம் குறிப்புகள் - Astrology Tips - Astrology - ஜோதிடம்