முதன்மை பக்கம் » ஜோதிடம் » ஜோதிடக் கேள்வி-பதில்கள் » பிறக்கும் நேரத்தைத் தவறாகச் சொல்லி ஜாதகம் கணித்தால் என்ன ஆகும்? பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கு எப்படி ஜாதகம் பார்க்க முடியும்?
பிறக்கும் நேரத்தைத் தவறாகச் சொல்லி ஜாதகம் கணித்தால் என்ன ஆகும்? பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கு எப்படி ஜாதகம் பார்க்க முடியும்? - ஜோதிடக் கேள்வி-பதில்கள்
பிறக்கும் நேரத்தைத் தவறாகச் சொல்லி ஜாதகம் கணித்தால் ஜாதக பலா பலன்கள் முற்றிலும் மாறுபடும். தசாபுக்தி மாறி விடும். சில சமயங்களில் நட்சத்திரம் / லக்னம் என அனைத்தும் கூட மாறி விடும். தசாபுக்தி மாறினால் ஜோதிடர் சொல்லும் பலன்கள் தாமதமாக நடக்கும் அல்லது தவறாக, முன் பின்னாக நடக்கும். லக்னம், ராசி, நட்சத்திரம் மாறினால் எல்லாமே மாறிப் போய் விடும். அந்த ஜாதகத்தை அடிப்படையாக வைத்துப் பலன்கள் சொன்னால் அது சரியாக இருக்காது. கணிப்புகள் தவறும். பாதக பலன்களும் ஏற்படலாம்.
பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கு எப்படி ஜாதகம் கூறுவார்கள் என்றால் ’பிரசன்ன ஜோதிடம்’ என்ற ஒரு முறை உண்டு. அதன்படி கேள்வி கேட்கும் நேரத்தையே அல்லது ஜோதிடரைச் சந்திக்கும் நேரத்தையே அடிப்படையாக வைத்து, ஜாதகம் கணித்துப் பலன் கூறுவார்கள். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கூட இம்முறை பின்பற்றப் படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிறக்கும் நேரத்தைத் தவறாகச் சொல்லி ஜாதகம் கணித்தால் என்ன ஆகும்? பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கு எப்படி ஜாதகம் பார்க்க முடியும்? - ஜோதிடக் கேள்வி-பதில்கள் - Astrology Question and Answers - Astrology - ஜோதிடம்