காஞ்சிபுரம் - தமிழக மாவட்டங்கள்
இளையனார் வேலூர் :
இக்கோயிலில் வேல் கருவறையுள் நிலைநாட்டி வணங்கப்படுகிறது. முருகப்பெருமான் இளமைக் கோலத்துடன் திகழ்கிறார். காஞ்சி புரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருப்பெரும்புதூர் கோயில் :
இவ்வூரிலுள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில் மிகப் பிரசித்தமானது. இதன் மண்டபங்கள் விஜயநகர அரசர்களால் கட்டப்பட்டவை. இதன் வைணவத்தைப் பரப்பிய இராமனுஜர் கோயில் உள்ளது. இராமனுஜர் பிறந்த இடமும் இதுதான். இக்கோயிலின் சந்நிதிக் கதவுகள் வெள்ளித் தகடுகளால் ஆனவை. மேலும் இங்கு ஸ்ரீ ஆண்டாள், சக்கரவர்த்தித் திருமகன், வேணுகோபாலன், நம்மாழ்வார் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. இது சைவர்களும் வைணவர்களும் வழிபடும் தலமாகும். இங்குள்ள சிவன் கோயில் பழமையானது. நந்திவர்ம பல்லவன் அமைத்த சிங்கத் தூணும், அவனது உருவச்சிலையும் இக்கோயில் மண்டபத்தில் உள்ளன. முன்னாள் பிரதமர் ராஜஂவ் காந்தியின் நினைவிடம் இங்குள்ளது.
மேல்மருவதூர் ஆதிபராசக்தி :
செங்கற்பட்டுக்கும் அச்சிறுவாக்கத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. தவத்திரு பங்காரு அடிகளார் இக்கோயிலை உருவாக்கினார். இவர் பல ஆன்மீக மாநாடுகளை நடத்தியுள்ளார். இக்கோயிலில் குறிப்பாக பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெண்பக்தர்களும் ஆண் பக்தர்களும் சிவப்பாடை அணிந்து சக்தியை வழிபடுகின்றனர். தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாத முறையில் இங்கு வரும் ஒவ்வொருவருமே அர்ச்சராக இருந்து வழிபடலாம். தமிழ்நாட்டின் பலபாகங்களிலிருந்து கால்நடையாகவே இங்கு வந்து சக்தியை வழிபடுகின்றனர். இங்கு ஆடிபூரத்திருவிழா வெகுச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு ஒரு பொறியியல் கல்லூரி ஆதிபராசக்தி கோயில் நிர்வாகத்தாரால் நடத்தப்படுகிறது.
கல்வி நிறுவனங்கள் :
காஞ்சிபுரம் மாவட்டம் கல்வி வளத்திற்கு புகழ் பெற்றது. உயர்நிலைப் பள்ளிகளும், கலைக்கல்லூரிகளும், ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகளும், வடமொழிக் கல்லூரிகளும், தொழில் நுட்ப கல்லூரிகளும் உள்ளன. மகாபலிபுரத்தில் சிற்பக் கலைக் கல்லூரி உள்ளது. இசை, நடனம் கற்பிக்க திருவான்மியூர் கடற்கரையோரம் கலாஷேத்திரம் அமைந்துள்ளது. மேலை நாடுகளிலிருந்தும், கீழை நாடுகளிலிருந்தும் மாணவ மாணவியர் இங்கு வந்து பயில்கின்றனர். தாம்பரத்திலுள்ள சிவானந்தா அனாதை இல்லத்தில பத்து வயத்திற்கும் குறைந்த அனாதைச் சிறுவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு தொழிற்கல்வி பெறுகின்றனர். காஞ்சிபுரத்தில பக்தவச்சலம் பாலிடெக்னிக்கும், குரோம்பேட்டையில் சென்னைத் தொழில்நுட்ப நிறுவனமும், சிறுதொழில் கல்வி நிலையங்கள் பலவும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன.
சுற்றுலா தலங்கள் :
மாமல்லபுரம், காஞ்சிபுரம், வேடந்தாங்கல், கரிக்கிலி, வி.ஜி.பி. தங்கக் கடற்கரை, திருக்கழுக்குன்றம், வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, காஞ்சிபுரம் அண்ணா நினைவகம் ஆகியவை இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களாகும்.
முக்கிய ஊர்கள் :
மகாபலிபுரம் :
மகாபலிபுரம் |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காஞ்சிபுரம் - Kancheepuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - காஞ்சிபுரம், இங்கு, மகாபலிபுரம், கோயில், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, இங்குள்ள, கல்லூரிகளும், கல்வி, மாமல்லபுரம், சிற்பக், உள்ளது, தகவல்கள், தமிழ்நாட்டுத், மகாபலிபுரத்தில், இப்போது, | , நாடுகளிலிருந்தும், கல்லூரி, முக்கிய, அண்ணா, இங்குள்ளது, இக்கோயிலில், information, districts, kancheepuram, இதன், இராமனுஜர், வழிபடுகின்றனர், சக்தியை, அமைந்துள்ளது, ஆதிபராசக்தி, வந்து