kaṇ-teriyātavaṉ n. <>id. +. Blind man; குருடன்.
கண்தெறி
-
த்தல்
kaṇ-teṟi v. intr. <>id. +. To be dazed, as the eyes by very strong light; பெருவெளிச்சத்தாற் கண்ணொளி மழுங்குதல்.
கண்பச
-
த்தல்
kaṇ-paca v. intr. <>id. +. To lose lustre, as the eyes, from distress; கண்ணின்நிறம் மாறுதல். அரிமத ருண் கண்பசப்பநோய் செய்யும் (கலித். 82, 20).
கண்பஞ்சடை
-
தல்
kaṇ-pacaṭai v. intr. <>id. + பஞ்சு + அடை-. To grow dim, as the eyes on the approach of death; மரணக்குறியாகக் கண் ஒளியறுதல். கண்பஞ்சடை முன்னே (பட்டினத். திருப்பா. பக். 173).
கண்பட்டை
kaṇ-paṭṭai n. <>id. +. Eye-lid; இமை. Loc.
கண்படு
1
-
தல்
kaṇ-paṭu- v. intr. <>id. +. 1. To sleep; நித்திரை செய்தல். அன்னங் கண்படு தண்பணை (நைடத. நாட்டுப். 2).
2. To spread over a surface; பரவுதல். வயலும் புன்செய்யுங் கண்பட வேர்பூட்டி (பு. வெ. 12, வென்றிப். 4).
3. To be in favour of, partial to; கண்ணோடுதல். கண்பட்டாழ்ந்துநெகிழ்ந்து (சிறுபஞ். 78).
4. To be affected by the evil eye; திருஷ்டிபடுதல். என்பிள்ளைக்கு யார் கண்பட்டதோ?
கண்படு
2
-
த்தல்
kaṇ-paṭu- v. intr. <>id. +. 1. To sleep; நித்திரைசெய்தல். பண்ணவன் கண்படுத்திடு பாற்கடல் (கந்தபு. திருக்கைலாச. 5).
2. To be set, as gams in jewels; பதிக்கப்பட்டிருத்தல். காசு கண்படுக்கு மாடம் (நைடத. சுயம்வர. 157).
கண்படை
kaṇ-paṭai n. <>id.+படு-. 1. Sleep; நித்திரை. மண்டமர் நசையொடு கண்படைபெறா அது (முல்லைப். 67).
2. Bed; bedroom; மனிதர் துயிலிடம். (சூடா.)
கண்படைநிலை
kaṇ-paṭai-nilai n. <>கண்படை+. 1. (Puṟap.) Theme of the court physicians, ministers, and other attendants of a king sitting in audience humbly suggesting to His Majesty that it is time for him to go to bed; அவையில் இரவில் நெடுநேரம் தங்குகையால் அரசனை நோக்கி மருத்துவர் முதலியோர் அவன் துயில்கோடலைக் கருதிக்கூறும் புறத்துறை. (தொல். பொ. 90.)
2. Name of the poem containing the kaṇ-patainilai theme; ஒர் பிரபந்தம். (தொன். 283, உரை.)
kaṇ-pāyccal n. <>id. +. Glance, look; பார்வை. (W.)
கண்பார்
-
த்தல்
kaṇ-pār- v. tr. <>id. +. 1. To look upon graciously, compassionately; கிருபைசெய்தல்.
2. To examine critically, as percious stones, elephants, horses ; பரீக்ஷித்தறிதல். (W.)
கண்பார்வை
kaṇ-pārvai n. <>id. +. 1. Supervision; மேற்பார்வை.
2. Estimate from personal examination; மதிப்பு.
கண்பிசை
-
தல்
kaṇ-picai- v. intr. <>id. +. To rub the eyes in sorrow; துக்கத்தால் கண்ணைக் கசக்குதல். கண்பிசைந் தொருசே யின்னுங் கலுழினும் (பிரபுலிங். கைலாச. 5). க்கூடியுள்ள சிறுகாய்கள்
கண்பிடி
kaṇ-piṭi n. <>id. +. Small jack fruit, small bunch of palmyra fruits, fruits attached to a larger fruit; ஒருகாம்பிற் பெருங்காயோடு கூடியுள்ள சிறுகாய்கள். (J.)
கண்பிதுங்கு
-
தல்
kaṇ-pituṅku- v. intr. <>id. +. To be so much fatigued from overwork as to cause even the bulging out of the eyes; வேலைமிகுதியால் வருத்தமிகுதல். இந்த வேலை கண்பிதுங்கச் செய்கிறது.
கண்பீளை
kaṇ-pīḷai n. <>id.+.[M. kaṇpīḷa.] Viscid discharge from the eye; கண்ணிலுண்டாகும் புளிச்சை.
கண்பு
kaṇpu n. cf. சம்பு. Elephant-grass; See சம்பங்கோரை. செருந்தியொடு கண்பமன் றூர்தர (மதுரைக். 172).
கண்புகைச்சல்
kaṇ-pukaiccal n. <>கண் +. 1. A disease of the eye; கண்ணோய்வகை.
2. Dimness of sight from age or disease; கண் மங்கல்.
கண்புதை
1
-
தல்
kaṇ-putai- v. intr. <>id. +. 1. To weaken, as understanding; அறிவு கெடுதல். கண்புதைந்த மாந்தர் (நல்வழி, 28).
2. To lie covered and hidden; மூடப்பட்டு மறைதல். பாருருவும் பார்வளைத்த நீருருவுங் கண்புதைய ... நிமிர்த்த கால் (திவ். இயற். பெரியதிருவ. 21).
கண்புதை
2
-
த்தல்
kaṇ-putai- v. intr. <>id. +. To cover the eyes; கண்பொத்துதல். வைவேற் கண்புதைத்து (திருக்கோ. 43).-tr. To cover, hide; மறைத்தல். கலவங் கண்புதையாது கணற்றலின் (சீவக. 1982).
கண்புரை
kaṇ-purai n. <>id. +. Cataract; கண்ணில் வளரும் படலம். Loc.