சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3733
Word
English & Tamil Meaning (பொருள்)
விற
-
த்தல்
viṟa-12 v. intr. (K. veṟe.)1. To be dense, close; to be intense;
செறிதல். கலுழ்ந்துவீ ழருவிப்பாடு விறந்து (நெடுநல். 97).
2. To abound, increase;
மிகுதல். களிப்பு விறக்கவிடும் பண்டங்கள் பெருகக்கூட்டில் (பதிற்றுப். 40, 18, உரை).
3. To conquer;
வெற்றிபெறுதல். (W.)
4. To To fight;
போர்செய்தல். (W.)
5. To fear;
வெருவுதல். விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும் (தொல். சொல். 348).
விறகாள்
viṟakāḷn. <>விறகு+ஆள்2.Firewood seller, one who hawks firewood;
விறகு சுமந்து விற்போன். விறகாளாய்ச் சாதாரி பாடுமாறும் (திருவாலவா. பதி. பாயி. 8).
விறகு
viṟakun. perh. விற-. [M. viragu.]1. Firewood, fuel;
எரிக்குங் கட்டை. நாறு நறும் புகை விறகின் (சீவக. 131).
2. Sacrificial fuel.
See சமிதை. களிறுதரு விறகின் வேட்கும் (பெரும் பாண். 499).
விறகுக்கட்டு
viṟaku-k-kaṭṭun. <>விறகு+.Bundle of firewood;
கட்டிய விறகுத்தொகுதி. விறகுக்கட்டு மூன்று (S. I. I. iii, 188, 7).
விறகுக்கட்டை
viṟaku-k-kaṭṭain. <>id.+.Stick of firewood;
எரிக்கவுதவும் மரத்துண்டு. (W.)
விறகுகாடு
viṟaku-kāṭun. <>id.+காடு1.1. Heap of firewood,
விறகின்தொகுதி. மரக்காடான விறகுகாடு எரிந்ததொத்தது (தக்கயாகப். 329, உரை).
2. Forest reserved for firewood;
விறகுவெட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட காடு. Mod.
விறகுதலையன்
viṟaku-talaiyaṉn. <>id.+தலை.1. See விறகாள். (W.)
.
2. See விறகுவெட்டி. (யாழ். அக.)
.
3. Stupid person;
முட்டாள். (W.)
விறகுவெட்டி
viṟaku-veṭṭin. <>id.+வெட்டு-.Wood-cutter;
மரம் தறிப்பவன்.
விறப்ப
viṟappapart. <>விற-.A particle of comparison;
ஓர் உவமவாய்பாடு. (தொல். பொ. 287.)
விறப்பு
viṟappun. <>id.1. Crowdedness, density, intensity;
செறிவு. (தொல். சொல். 347.)
2. Increase;
பெருக்கம். (W.)
3. Strength;
பலம். (பிங்.)
4. Victory;
வெற்றி. (சூடா.)
5. Battle;
போர். (சூடா.)
6. Fear;
அச்சம். (தொல். சொல். 348.)
விறல்
viṟaln. cf. விற-.1. Victory;
வெற்றி. விறல¦னும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு (குறள், 180).
2. Bravery;
வீரம். (யாழ். அக.)
3. Strength;
வலி. விறல்விசயனே வில்லுக்கிவ னென்றும் (வோ. 647, 2).
4. Greatness;
பெருமை. (பிங்.)
5. Distinctive excellence;
விசேடம். பெருவிறல் யாணர்த்தாகி (புறநா. 42, 12).
6. Physical expression of emotion;
உள்ளக்குறிப்புப் பற்றி உடம்பிற்றோன்றும் வேறுபாடு. (தொல். பொ. 249, உரை.)
விறல் (லு)
-
தல்
viṟal-5 v. intr. <>விறல்.To rush forward with rage;
கோபத்தோடு எதிர்த்துச் செல்லுதல். மதுரைமுன்னா விறலி வருகின்றதது (திருவிளை. மாயப்பசு. 9).
விறல்கோளணி
viṟal-kōḷ-aṇin. <>id.+கோள்1+அணி2.(Rhet.) A figure of speech in which is described the heroic acts against an enemy or his allies;
பகை அல்லது அதன் துணையின் மேற் செலுத்தும் பராக்கிரமத்தைக் கூறும் அணிவகை. (அணியி. 58.)
விறல்வென்றி
viṟal-veṉṟin. <>id.+.Victory due to one's prowess;
போர்வீரத்தாலுண்டாகிய வெற்றி. இன்னிசைய விறல்வென்றித்தென்னவர் வயமறவன் (புறநா. 380, 4).
விறலி
viṟalin. <>id.1. Female dancer who exhibits the various emotions and sentiments in her dance;
உள்ளக்குறிப்புப் புறத்து வெளிப்பட ஆடுபவள். (தொல். பொ. 91.)
2. Woman of the pāṇ caste;
பாண்சாதிப் பெண். (பிங்.)
3. Girl who is 16 years old;
பதினாறு வயதுப்பெண். (யாழ். அக.)
விறலியாற்றுப்படை
viṟali-y-āṟṟu-p-paṭain. <>விறலி+. (Puṟap.)Theme in which a viṟali who had been rewarded by a king directs another viṟali to the royal presence to obtain rewards;
அரசன்பாற் பரிசில்பெற்ற ஓர் விறலி பரிசில்பெற விரும்பும் விறலியை அவன்பால் ஆற்றுப்படுத்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 9, பாடாண். 31.)
விறலிவிடுதூது
viṟali-viṭu-tūtun. <>id.+விடு-+.A poem in which a person who led the life of a profligate repents and sends a viṟali as a messenger to his wife to acquaint her with his good fortune in obtaining the patronage of a chieftain and to conciliate her;
தூர்த்தனாய்த் திரிந்த ஒருவன் தான் கழிந்ததற் கிரங்கிப் பின் ஓர் தலைவனை யடுத்துப் பரிசில்பெற்றுத் தன் மனைவிபால் ஓர் விறலியைத் தூதனுப்புவதாகக் கூறும் பிரபந்தம்.
விறலோன்
viṟalōṉn. <>விறல்.1. Robust, strong man;
திண்ணியன். (பிங்.)
2. Warrior; hero;
வீரன். விறலோன் மார்பம் புல்லேம் யாமென (பு. வெ. 9, 47).
3. Arhat;
அருகன். (பிங்.)
விறன்மிண்டநாயனார்
viṟaṉmiṭa-nāy-aṉārn.A canonized šaiva saint, a contemporary of Cuntaramūrtti-nāyaṉār, one of 63;
நாயன்மார் அறுபத்துமூவருள் சுந்தரமூர்த்திகள் காலத்தவரான ஒரு சிவனடியார். (பெரியபு.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3733 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், firewood, தொல், பிங், viṟaku, viṟali, விறல், விறகு, விறலி, victory, கூறும், வெற்றி, viṟal, யாழ், சொல், fuel, உள்ளக்குறிப்புப், விறகாள், புறநா, increase, விறலோன், விறகின், strength, person, விறகுவெட்டி, விறகுகாடு, சூடா, விறகுக்கட்டு, intr