viḷai- 11 v. tr. Caus. of விளை1-. 1. To raise, cause to grow; பயிர் முதலியன வளரச்செய்தல். செய்விளைக்கும் வாய்க்கா லனையார் தொடர்பு (நாலடி, 218).
2. To produce, bring into being; உண்டாக்குதல். புகழ் விளைத்தல் (பு. வெ. 2, 14).
3. To perform, as worship; புரிதல். பூசனை விளைத்த வாறும் (விநாயகபு. பதிக. 22).
விளை
3
viḷai n. <>விளை1-. [K. beḷe.] 1. See விளைவு, 1. (அரு. நி.) .
2. See விளைவு, 4. .
3. Experience; அனுபவம். விளைவயின் மாண்டற் கரி தாம் பயன் (குறள், 177).
4. Dry land; புன்செய்க் காடு. Tinn.
5. High ground far above the level of the water-course; நீரேறாத மேட்டுநிலம். (W.)
6. Forest round a city, serving as a defence; நகர்சூழ் காவற்காடு. (நாமதீப. 519)
விளை
4
viḷai n. <>கருவிளை. Mussel-shell creeper. See காக்கட்டான், 1. விளையின் மென்பூ (கம்பரா. கார்காண். 32).
விளை
5
viḷai n. 1. String; நரம்பு. (அரு. நி.)
2. A kind of fish; மீன்வகை. (யாழ். அக.)
விளைகரி
viḷai-kari n. <>விளை1-+கரி1. Coal, mineral coal; நிலக்கரி. (W.)
விளைச்சல்
viḷaiccal n. <>id. 1. See விளைவு, 4. (சிலப் 6, 30, அரும்.) .
2. Ripening grain; முற்றிவரும் பயிர். (W.)
3. See விளைவு, 1, 2, 6, 7. .
4. Precocity; இளைமையிலேயே முதிர்ந்த அறிவு. Loc.
விளைஞர்
viḷaiar n. <>விளை2-. (சூடா.) 1. Agriculturists; மருதநிலமாக்கள்.
2. šūdras; சூத்திரர்.
விளை நிலம்
viḷai-nilam n. <>விளை1-+. Fertile ground, arable land, land suitable for raising crops; பயிரிடக்கூடிய நிலம். விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் (நாலடி, 133).
விளை நீர்
viḷai-nir n. <>id.+நீர்1. Water for irrigation; பாசனத்துக்குரிய நீர். விளைநீராக வளர்ந்தபடி (திவ். திருப்பா. 17, வ்யா. பக். 164).
விளைநீரடை
-
த்தல்
viḷainir-aṭai- v. intr. <>விளைநீர்+. To let water into a field, in quantity sufficient for its irrigation; பாசனத்திற்கு வேண்டிய அளவுக்கு நீர்தேக்கிக்கொள்ளுதல். விளை நீரடைத்துக்கொண்டு (ஈடு, 6, 2, ப்ர.).
விளைப்பு
viḷaippu n. <>விளை2-. Doing; செய்கை. (யாழ். அக.)
விளைபுலம்
viḷai-pulam n. <>விளை1-+. See விளைநிலம். (தக்கயாகப். 2, உரை.) .
விளைபொருள்
viḷai-poruḷ n. <>id.+. Produce, product; நிலத்திலுண்டாம் பொருள்.
விளையவை
-
த்தல்
viḷaiya-vai- v. tr. <>id.+. 1. To cause to mature or ripen; முதிரச் செய்தல். (W.)
2. To make a thing serve its purpose; பயன்படச்செய்தல்.
3. To cause to be productive; விளைவுண்டாகச் செய்தல்.
4. To allow to crystallize; இறுகிக் கட்டியாகும்படி விடுதல். (W.)
5. To set aside to ferment, as indigo; அவுரிச்சரக்கை அழுகவைத்தல். (W.)
6. To kindly a fire for burning a corpse; தகனக் கிரியைக்கு நெருப்பு மூட்டுதல். (W.)
விளையாட்டம்
1
viḷaiyāṭṭam n. <>விளையாடு-. See விளையாட்டு. பிள்ளை விளையாட்ட மனைத்தினும் (திவ். பெருமாள். 7, 9).
விளையாட்டம்
2
viḷai-y-āṭṭam n. <>விளை1-+ஆடு-. cf. திருவிடையாட்டம். See விளைநிலம். கோவில் விளையாட்ட மெங்கும் (குற்றா. குற. 98).
விளையாட்டம்மை
viḷaiyāṭṭammai n. <>விளையாட்டு+அம்மை1. 1. Measles; மணல்வாரியம்மைவகை.
2. Chicken-pox. See சின்னம்மை, 2.
விளையாட்டு
viḷaiyāṭṭu n. <>விளையாடு-. 1. Play, sport, pastime. recreation; பொழுதுபோக்குக்குரிய மகிழ்ச்சிச் செயல். இன்று நீர்விளையாட்டினுள் (சீவக. 903).
2. That which is done with ease; சிரமமின்றி இலேசாகச் செய்யுந் தொழில். பெருவிளையாட் டைந்தாடும் பிஞ்ஞகன் (திருவாலவா. நாட்டுச். 1).
3. Fun; வேடிக்கை. நான் இதை விளையாட்டாகச் சொன்னேன். (W.)
4. See விளையாடல், 3. .
5. Adapting the cantam to the vaṇṇam, one of eight kalai-t-toḻil, q.v.; கலைத்தொழில் எட்டனுள் பாடநினைத்தவண்ணத்திற் சந்தத்தை விடுகை. (சீவக. 657, உரை).
விளையாட்டுக்காட்டு
-
தல்
viḷaiyāṭṭu-k-kāṭṭu- v. intr. <>விளையாட்டு+. (W.) 1. To divert children; குழந்தைகட்குப் போக்குக்காட்டுதல்.
2. To exhibit one's magical powers, art etc.; சாலவித்தை முதலியன காண்பித்தல்.
3. To play tricks; வேடிக்கைகாட்டுதல்.
விளையாட்டுக்கூட்டம்
viḷaiyāṭṭu-k-kūṭṭam n. <>id.+. 1. Merry or gay company; களித்து விளையாடுதற்கு உரியவரின் கூட்டம். (தக்கயாகப். 307, உரை).
2. Idle crowd gathering together for no purpose; காரணமின்றிச் சேருஞ்சனத்திரள். (யாழ். அக.)