சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3653
Word
English & Tamil Meaning (பொருள்)
விட்டுப்போ
-
தல்
viṭṭu-p-pō-v. intr. <>id.+.1. To be left; to be abandoned;
நீங்கி விடுதல்.
2. to have smarting pain;
மிக்க நோவாயிருத்தல். கை கால்கள் விட்டுப்போகின்றன.
விட்டும்விடாதவாக்கச்சொல்
viṭṭum-viṭāta-v-ākka-c-coln. <>id.+. (Gram.)Word in which the primary sense is partly retained and partly discarded;
விட்டும்விடாதவிலக்கணை யாக வருஞ் சொல். (யாழ். அக.)
விட்டும்விடாதவாகுபெயர்
viṭṭum-viṭāta-v-ākupeyarn. <>id.+.See விட்டும்விடாதவிலக்கணை. (W.)
.
விட்டும்விடாதவிலக்கணை
viṭṭum-viṭāta-v-ilakkaṇain. <>id.+. (Gram.)A variety of ilakkaṇai, in which the primary sense of a word is partly discarded and partly retained, one of three ilakkaṇai, q.v.;
இலக்கணை மூன்றனுள் ஒருவாசகத்திலே ஒரு பாகத்தின் பொருளை விட்டு மற்றைப்பாகத்தின் பொருள் இயைபு பெற நிற்கும் இலக்கணை. (வேதா. சூ. 119.) (இலக். அக.)
விட்டுமாறு
-
தல்
viṭṭu-māṟu-v. <>id.+. intr.To change course; to deviate;
வேறு வழியில் திரும்புதல். --tr.
See விட்டுப்பிடி-, 3.
.
விட்டுரை
-
த்தல்
viṭṭurai-v. tr. <>id.+.See விட்டுச்சொல்-. (திருக்கோ. 391, உரை.)
.
விட்டுவாங்கி
viṭṭu-vāṅkin. <>id.+.One who prostitutes his wife for gain;
தன் மனைவியைப் பிறனுக்குக் கொடுப்போன். (J.)
விட்டுவிட்டுமின்னு
-
தல்
viṭṭu-viṭṭu-miṉṉu-v. intr. <>id.+விடு1-+.To twinkle;
நட்சத்திரம்போல ஒளி வீசுதல்.
விட்டுவிடு
-
தல்
viṭṭu-viṭu-v. tr. <>id.+.1. To let go; to loose one's hold upon;
பிடிப்புவிடுதல்.
2. To forego, resign, relinquish, giveup, abandon;
விலகிவிடுதல்.
விட்டுவிளங்கு
-
தல்
viṭṭu-viḷaṅku-v. intr. <>id.+.To shine with added lustre;
நன்றாகப் பிரகாசித்தல்.
விட்டெறி
-
தல்
viṭṭeṟi-v. tr. <>id.+எறி-. [M. viṭṭēru.]1. To throw away; to fling;
தூர விழும்படி எறிதல். ஒருவரை யொருவர் விட்டெறிவர் (கம்பரா. வாலிவ. 47).
2. To leave, abandon;
நீக்குதல்.
விட்டேற்றாளன்
viṭṭēṟṟāḷaṉn. <>விட்டேறு+.See விட்டேற்றி, 1. விடருந் தூர்த்தரும் விட்டேற் றாளரும் (மணி. 14, 61, அரும்.).
.
விட்டேற்றி
viṭṭēṟṟin. <>id.1. One who forsakes his relations and induces others to do likewise;
சுற்றத்தினின்று நீங்கிப் பிறரையும் அவ்வாறு செய்விப்போன். (மணி. 14, 61, அரும்.)
2. One who is unconnected or unconcerned;
தொடர்பற்றவ-ன்-ள். அது விஷயத்தில் விட்டேற் றியா யிருப்பது நலம்.
விட்டேறரணம்
viṭṭēṟaraṇamn. <>id.+அரணம்1.See விட்டேறு, 1, 2. (சது.)
.
விட்டேறு
viṭṭēṟun. <>விடு1-+எறி-. [K. buṭtēṟu.]1. Missile weapon;
எறிகோல். (பிங்.) (சிலப். 15, 216, உரை.)
2. Javelin;
வேல். (பிங்.) புயமறவே விட்டேறடும் (இரகு. நகர. 28).
3. Harsh word of ridicule;
இகழ்ந்து கூறுங்கடுஞ்சொல். விடருந் தூர்த்தரும் விட்டே றுரைப்ப (பெருங். உஞ்சைக். 35, 226).
விட்டை
viṭṭain. <>viṣṭhā.Dung of animals;
விலங்குகளின் மலம். (நாமதீப. 599.)
விட்டோசை
viṭṭōcain. <>விடு1-+. (Gram.)Pronouncing the letters of a word with a pause after each;
சொல்லின் எழுத்துக்களைப் பிரித்து உச்சரிக்கை. (W.)
விட்ணு
viṭṇun.See விட்டுணு. (W.)
.
விட்புலம்
viṭ-pulamn. <>விண்1+.Heaven;
விண்ணுலகம் எங்கட் புலங்காண விட்புலம் போயது (சிலப். பதி. 8).
விட
viṭa<>விடு1-. adv.Exceedingly, very;
மிகவும். விடக்களியா நம் விழுநகர் (திருக்கோ. 297).-prep.
Than, compared with;
காட்டிலும். அதைவிட இது நல்லது.
விடக்கிருமிநியாயம்
viṭa-k-kirumi-niyā-yamn. (Log.)A nyāya.
See விஷகிருமிநியாயம்.
விடக்கு
viṭakkun.1. Flesh, meat;
இறைச்சி. மீன்றடிந்து விடக்கறுத்து (பட்டினப். 176).
2. [K. Tu. bikku, M. vidakku.] Carcass;
சவம். பரு விடக்கைப்பற்றி இரண்டுபதார்த்தம் விவாதம் ஒண்ணுமா போலே (திவ். திருமாலை, 27, வ்யா. பக். 4).
விடக்கோள்
viṭa-k-kōḷn. <>விடம்1+கோள்1.An invisible planet.
See குளிகன், 2. (நாமதீப. 103.)
விடகண்டன்
viṭa-kaṇṭaṉn. <>viṣa-kaṇṭha.šiva;
சிவபிரான். (இலக். அக.)
விடகலை
viṭa-kalain. <>viṣa+. (šaiva.)A mystic centre in the body;
ஒரு கலை. மேதைய ருக் கீசம் விடகலை (பிராசாதமாலை, 2).
விடகாரி
viṭa-kārin. <>viṣa+hārin.See விடதாரி. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி (வாக்குண். 15). (இலக். அக.)
.
விடங்கம்
viṭaṅkamn. <>viṭaṅka.1. Dove-cot;
புறாக்கூடு. (யாழ். அக.)
2. Curved cornice or projection.
See கொடுங்கை, 2. (பிங்.) துப்பினால் விடங்கம் . . . செய்து (திருவிளை. திருமணப். 70).
3. Projection of a beam or joist outside the wall of a house;
சுவர்ப்புறத்து வெளிவந்துள்ள உத்திரக்கட்டை. (W.)
4. Ridge of a roof;
வீட்டின் முகடு. (பிங்.) வெந்நிற் றண்டென் விடங்கத்து (ஞானா. 9, 2).
5. Banner hoisted in a building and projecting into the street;
வீதிக்கொடி. (பிங்.)
6. The naturally formed lingam, as unchiselled;
உளியினாற் செய்யப்படாது இயற்கையாயமைந்த லிங்கம். சோதி விடங்கமே யாயினும் . . . மேவினான் (திருவாரூ. 26).
7. Beauty;
அழகு. (பிங்.)
8. Manliness, ability, bravery;
ஆண்மை. (பிங்.)
9. Youth;
இளமை. (அரு. நி.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3653 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், viṭṭu, பிங், word, viṭa, intr, partly, இலக், விட்டேறு, விட்டும்விடாதவிலக்கணை, விடு1, viṣa, viṭṭum, gram, viṭāta, சிலப், projection, அரும், விடங்கம், விடகலை, விடகாரி, விட்புலம், நாமதீப, விட்டேற், திருக்கோ, retained, discarded, sense, primary, பொருள், யாழ், ilakkaṇai, விடருந், விட்டேற்றி, abandon, இலக்கணை, தூர்த்தரும்