சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2753
Word
English & Tamil Meaning (பொருள்)
புடைபடு
-
தல்
puṭai-paṭu-v. <>id.+. tr.To approach; to be near;
அணுகுதல். என்னாரமுதைப் புடைபட்டிருப்ப தென்றுகொல்லோ (திருவாச. 27, 1). -intr.
1. To be roomy, spacious;
இடம்படுதல். மலைகளைப் புடைபடத் துளைத்து (ஈடு,10,6,6).
2. To be excessive;
மிகுதியாதல். அரசனும் புடைபடக்கவன்று (இறை. 1, பக். 7).
3. To swell in size; to become round;
திரண்டு பருத்தல். முதிர்ச்சியாற் புடைபடுதல் (குறள், 1274, உரை).
புடைபர
-
த்தல்
puṭai-para-v. intr. <>id.+To expand, swell ;
சுற்று விரிதல். எய்த்திடை வருந்த வெழுந்து புடைபாந்து (திருவாச. 4, 33).
புடைபெயர்
-
தல்
puṭai-peyar-v. intr. <>id.+1. To change in condition or position; to become topsy-turvy or overturned;
நிலை மாறுதல். நிலம் புடை பெயர்வ தாயினும் (புறநா. 34).
2. To go beyond; to trangress limits;
வெளியேறுதல். புடைபெயர் கடலென (கம்பரா. எழுச்சி. 10).
3. To move, change place;
அசைதல். நாப்புடைபெயராது(மணி. 23, 16).
4. To do an action;
தொழிற்படுதல்.
5. To rise up, get up;
எழுந்திருத்தல். கனவொடும் புடைபெயர்ந்து (தக்க யாகப் 240).
புடைபெயர்ச்சி
puṭai-peyarccin. <>புடைபெயர்-.1. Change in condition or position;
நிலைமாறுகை.
2. Movement; journey as from a place;
வெளியேறுகை.
3. (Gram.) Action of the agent;
கருத்தாவின் தொழிற்பாடு.
புடைமண்
puṭai-maṇn. <>புடை3+.Plaster ;
சுதை. (யாழ். அக)
புடையடுப்பு
puṭai-y-aṭuppun. <>id.+.Side-oven ;
கொடியடுப்பு. Loc.
புடையல்
puṭaiyaln. prob.புடை-.Garland ;
மாலை. இரும்பனம் புதையல் (புறநா. 99).
புடையன்
puṭaiyaṉn. <>id.Wart snake, Chersydrus granulatus;
பாம்புவகை. (நாமதீப. 257).
புடையுண்(ணு)
-
தல்
puṭai-y-uṇ-v. intr.<>புடை2+.To be beaten, thrashed;
அடிபடுதல் பேயினார் புடையுண்டாரோ (பாரத. சூது. 267).
புடைவை
puṭai-vain. <>புடை3+வை-.1.Garment ;
ஆடை. வெண்புடைவை மெய்சூழ்ந்து (பெரியபு. திருநாவுக். 1).
2. Saree ;
மகளிர் சீலை.
புடோதகம்
puṭōtakamn. <>puṭōdaka.Coconut ;
தெங்கு. (சங். அக.)
புடோல்
puṭōln. <>paṭōlī.Snakegourd. See புடல்.
.
புடோலங்காய்
puṭōlaṅ-kāyn. <>புடோல்+.Fruit of snake-gourd ;
புடலங்காய். (தொல். எழுத். 405, உரை).
புண்
puṇn. [T. puṇdu K. M. puṇ.]1. Raw sore, ulcer, wound;
உடற்றோலில் உண்டாம் ஊறு. தீயினாற் சுட்டபுண் (குறள்,129).
2. Flesh;
தசை. பிறவற்றின் புண்ணுமாந்தி (சீவக. 2822).
3. Scar, scratch;
வடு. கொடிற்றுப்புண் (கலித். 95).
4. Soreness of heart;
மனநோவு. புண்டரு நெஞ்சினள். (சேதுபு. கத்துரு. 15).
புண்டரம்
puṇṭaramn. <>puṇdra.1. Marks on the forehead and other parts of the body, made with sandal, sacred ashes or earth;
சந்தனம் நீறு முதலியவற்றால் நெற்றி முதலியவற்றில் தரிக்கும் குறி. புண்டர விசால நெற்றிப் புரவல (பாரத. சூது. 28).
2. White sugar-cane;
வெண்கரும்பு. (மலை.)
3. Eagle;
கழுகு. (பிங்.) வரும்புண்டரம் . . . பேருதிநீ (கம்பரா. சடாயுவுயிர், 104).
4. Common delight of the woods.See குருக்கத்தி. (இலக் .அக)
.
புண்டரிகத்தவன்
puṇṭarikattavaṉn. <>புண்டரிகம்.Brahmā, as seated on a lotus;
பிரமன். புண்டரிக்கத்தவன் மேவிய (தேவா. 141, 3).
புண்டரிகத்தி
puṇṭarikattin. <>id.See புண்டரிகை.
புண்டரிகத்திசே ரிவன்றருங் குரிசில் (இரகு. குலமு. 3).
புண்டரிகம்
puṇṭarikamn. <>puṇdarīka.1. Lotus;
தாமரை. மலரிட்டுப் புண்டரிகப் பாதம் (திவ். இயற். நான்மு. 45).
2. Male elephant of the south-east, one of aṣṭa-tik-kajam, q.v.
அஷ்டதிக்கஜங்களுள் தென்கீழ்த்திசை யானை. (பிங்.)
3. Tiger;
புலி. புண்டரிகத்துரியான் (இரகு. குலமு. 3).
4. Beetle; bee;
வண்டு(பிங்.) பாடற் புண்டரி கத்த செம்பதுமம் (இரகு. குலமு. 3).
புண்டரிகன்
puṇṭarikaṉn. <>id.Viṣṇu, as lotus-eyed ;
திருமால் புண்டரிக நின்சரமென் (கம்பரா. தேரேறு. 55).
புண்டரிகை
puṇṭarikain. <>id.Lakṣmī, as seated on a lotus ;
இலக்குமி. புண்டரிகைபோலுமிவள் (கம்பரா. சூளா. 1).
புண்டரீகபுரம்
puṇṭarīka-puramn. <>id.+.Chidambaram, as the place where Vyāghrapāda the tiger-footed Sage worshipped ;
[வியாக்கிரபாதர் வணங்கிய தலம். ] சிதம்பரம். புண்டரிகபுரத்தில். . நடம்புரியும் புனிதவாழ்வே (தாயு. ஆசை. 12).
புண்டரீகம்
puṇṭarīkamn. <>puṇdarīka.1. White lotus;
வெண்டாமரை. (மலை.) வெள்ளித ழாலொரு புண்டரீகமும் (தக்கயாகப். 282).
2. See புண்டரிகம். (பிங்.)
.
3. Eagle;
கழுகு. (சூடா.)
4. Fleabane. See மாசிபத்திரி. (அக.நி.)
.
5. A Kind of leprosy;
குஷ்ட நோய் வகை. (அக. நி.)
6. White umbrella, as an emblem of royalty;
வெண் கொற்றக்குடை . (அக. நி.)
7. A Kind of sacrifice;
யாகவகை. (பிங்.) வாய்ந்தபுண்டரீக யாகம் (செவ்வந்திபு. சார. 9).
8. Anthill;
புற்று. (அக. நி.)
9. Throne;
சிங்காசனம். (அக. நி.)
10. Chowry;
சவரி. (அக. நி.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2753 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், puṭai, பிங், lotus, intr, கம்பரா, புண்டரிகம், place, இரகு, change, குலமு, புடைபெயர், kind, கழுகு, tiger, puṇdarīka, eagle, seated, புண்டரிகை, snake, condition, position, குறள், swell, திருவாச, புடை, புறநா, சூது, பாரத, புடை3, action, புடோல்