சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2673
Word
English & Tamil Meaning (பொருள்)
பிரணீதபாத்திரம்
piraṇīta-pāttiramn. <>praṇīta+.A cup used in sacrificial ceremonies;
ஒமச்சடங்கிற்கு உரிய பாத்திரம். (சீவக. 2463, உரை.)
பிரத்தம்
1
pirattamn. <>prastha.1. A weight of 10 patārttam;
10 பதார்த்தம்கொண்ட ஒரு நிறை. (சுக்கிரநீதி, 105.)
2. A standard dry measure;
அளவு நாழி. (நாமதீப. 802.)
பிரத்தம்
2
pirattamn.Mishap, danger, calamity;
பிரமாதம். (தக்கயாகப். 435.)
பிரத்தரி
-
த்தல்
pirattari-11. v. tr. <>prastāra.To do pirattāram;
பிரத்தாரஞ்செய்தல். அவ்வாறு பிரத்தரிக்கப்பட்டனவற்றுள் இணைத்தாவதென்று (யாப். வி. பக். 471).
பிரத்தல்
pirattaln.Inarticulate sound;
எழுத்திலாவோசை. (சது.)
பிரத்தாபம்
pirattāpamn.See பிரஸ்தாபம்.
.
பிரத்தாபனை
pirattāpaṉain.See பிரஸ்தாபனை.
.
பிரத்தாரம்
pirattāramn. <>pra-stāra.1. Enumeration of all the possible combinations of metrical syllables in a given versemode;
கட்டளையடியிற் பல்வேறுவகையாக வரக்கூடும் அசைகளையெல்லாம் மொத்தக்கணக்கிடுகை. (யாப். வி. பக். 471.)
2. (Mus.) An element of time-measure, one of ten tāḷa-p-pirāṇam, q.v.;
தாளப்பிராணங்களுள் ஒன்று.
பிரத்தியக்கம்
pirattiyakkamn.See பிரத்தியட்சம். சுட்டுணர்வைப் பிரத்தியக்க மெனச்சொலி (மணி 29, 148)
.
பிரத்தியக்கவிருத்தம்
pirattiyakka-virut-tamn. pratyakṣa+.That which is contrary to direct perception;
காட்சிக்கு மாறுபட்டது. பிரத்தியக்கவிருத்தங் கண்ணிய காட்சி மாறுகொளலாகும் (மணி.29, 148).
பிரத்தியக்கு
pirattiyakkun. <>Pratyak.>West;
மேற்கு. (பிங்.)
பிரத்தியகான்மா
pirattiyak-āṉmān. <>pratyag-ātmā.Individual soul;
சீவான்மா. பிரத்தியகான்மாவின் சோதியாம் (வேதா.சூ.106).
பிரத்தியங்கம்
pirattiyaṅkamn. <>pratyaṅga.Minor or secondary member, as of the body.
See உபாங்கம். (யாழ். அக.)
பிரத்தியட்சக்கிரகணம்
pirattiyaṭca-k-kirakaṇamn. <>pratyakṣa+.Visible eclipse;
கண்ணுக்குப் புலப்படும் கிரகணம். (C. G.)
பிரத்தியட்சதரிசனம்
pirattiyaṭca-tarica-ṉamn. <>id.+.Ocular vision;
கண்ணாற்கண்ட காட்சி. (W.)
பிரத்தியட்சப்பிரமாணம்
pirattiyaṭca-p-piramāṇamn. <>id.+. (Log.)See பிரத்தியட்சம், 2. (W.)
.
பிரத்தியட்சம்
pirattiyaṭcamn. <>pratyakṣa.1. Perception;
காட்சி
2. (Log.) Perception, as a mode of proff, one of six piramāṇam, q.v;
பிரமாணம் ஆறனுள் காண்டலளவை.
பிரத்தியபகாரம்
pirattiyapakāramn. <>pratyapakāra.Retaliation;
தீமைக்குப் பிரதியாகச் செய்யுந் தீமை. (சங். அக.)
பிரத்தியம்
pirattiyamn.See பிரத்தியட்சம், 2. மெய்ப்பிரத்திய மனுமானஞ் சாத்தம் (மணி. 27, 83).
.
பிரத்தியயம்
pirattiyayamn. <>pratyaya.Affix or suffix;
விகுதி முதலிய இடைச்சொல். மன்னும் பிரத்தியயமே தத்திதாந்தம் (பி. வி. 29).
பிரத்தியருத்தம்
piratti-y-aruttamn. <>pratyartha. (யாழ். அக.)Rejoinder;
எதிருரை.
Answer;
மறுமொழி
பிரத்தியவற்கந்தனம்
pirattiyavarkantaṉamn. <> pratyava-skandana.Statement by a defendant explaining his position after admitting the plaintiff's allegations;
வாதியாலெழுதிக்கொடுக்கப்பட்ட விவரங்களை முற்றும் அங்கீகரித்துப் பிரதிவாதி கூறும் சமாதானம். (சுக்கிரநீதி, 270.)
பிரத்தியவாயம்
pirattiyavāyamn. <>pratyavāya.Harm;
குற்றம். (யாழ்.அக)
பிரத்தியனீகவலங்காரம்
pirattiyaṉika-v-alaṅkāramn. <>pratyanīka+. (Rhet.)A figure of speech in which one is described as trying to injure a person or thing resembling one's enemy, when the enemy himself cannot be injured;
வெல்லக்கூடாத உவமேயத்தையொத்த பிறிதொரு பொருள்மேல் உவமைப்பொருள் பகைமை சாதிப்பதாகக் கூறும் அணிவகை. (மாறன.135.)
பிரத்தியாகதம்
pirattiyākatamn. <>pratyā-hata. (Mus.)A succession of staccato notes, one of ten kamakam, q.v.;
கமகம் பத்தனுள் ஒன்று. (பரத. இராக. 24.)
பிரத்தியாகாரம்
pirattiyākāramn. <>pratyā-hāra.Withdrawal of the senses from external objects, one of aṣṭāṅkayōkam, q.v.;
அஷ்டாங்கயோகத்துள் இந்திரியங்களை விஷயங்களிலிருந்து திருப்புகை.
2. Comprehension of a series of letters of a sūtrā in one syllable by combining its first letter with the last and omitting the intermediate letters, as ac in Sanskrit grammar;
வடமொழிச் சூத்திரங்களின் முதல் கடைகளில் நின்றவெழுத்துக்களைக் கூட்டி இடைநின்ற வெழுத்துக்களை நீக்கி அனைத்தையுமுணர்த்துங் குறியீடாக வமைக்கை. (பி. வி. 4.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2673 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பிரத்தியட்சம், perception, pirattiyaṭca, யாழ், pratyakṣa, கூறும், enemy, pratyā, letters, pirattamn, சுக்கிரநீதி, யாப், பிரத்தம், measure, காட்சி, ஒன்று