சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1847
Word
English & Tamil Meaning (பொருள்)
தாரை
3
tārai,n. <>tāra.1. Long brass trumpet;
நீண்ட ஊதுங்குழல். தாரை போரெனப்பொங்கின (கம்பரா. கடிமண். 41).
2. Long reed instrument;
ஒருவகைச் சின்னம். (W.)
3. Watersquirt;
நீர்வீசுங் கருவி. தாழ்புனற் றாரையும் (பெருங். உஞ்சைக். 38, 105).
தாரைகவணி
tārai-kavaṇi,n. <>தாரை2+.A fine variety of striped muslin;
கோடுள்ள துகில்வகை. (W.)
தாரைத்தாள்வட்டில்
tārai-t-tāḷ-vaṭtil,n.A kind of vessel;
பாத்திரவகை. (S. I. I. ii, 5.)
தாரைப்பட்டு
tārai-p-paṭṭu,n. <>தாரை+.Striped silk;
கோடுகள் அமைந்த பட்டுவகை. (W.)
தாரைமழுங்கல்
tārai-maḷuṅkal,n. <>id.+.A flaw in the diamond;
வயிரக்குற்றங்களுள் ஒன்று (சிலப்.14, 180, உரை.)
தாரைவார்
-
த்தல்
tārai-vār-,v. tr. <>id.+.1. To make gifts by pouring water on the right hand of the donee;
நீர்வார்த்துத் தத்தம்பண்ணுதல். தாரைவாரெனக் கௌசிகன் சாற்றிட (அரிச்.பு.சூழ்வி.79).
2. To lose, as property;
தொலைத்துவிடுதல். அவன் தன் சொத்துக்களைத் தாரை வார்த்துவிட்டான்.
தாரோகா
tārōka,n. <>U. dārōgha.Superintendent of peons;
சேவகர் தலைவன். (W.)
தால்
tāl,n. <>tālu.1. Tongue;
நா. பச்சைத் தாலரவாட்டீ (திருவாச. 38, 4).
2.See தாலாட்டு. (யாழ். அக.)
.
3.See தாலப்பருவம். செங்கீரைதால் சப்பாணி (இலக். வி. 806).
.
தாலகி
tālaki,n. <>tālakī.Toddy;
கள். (சங்.அக.)
தாலகேதனன்
tāla-kētaṉaṉ,n. <>tāla+.Lit.., he who has palmyra-banner. (பனை எழுதிய கொடியையுடையோன்) 1. Balarāma;
பலராமன்.
2. Bhiṣma;
பீஷ்மர்.
தாலகேது
tāla-kētu,n. <>id. +.See தாலகேதனன். தாளகேதுவையுந் சே...கொண்டு நீ செல்க (பாரத.வாசு.17) .
.
தாலப்பருவம்
tāla-p-paruvam,n. <>tālu+.Portion dealing with the cradle-songs of the hero, one of ten sections of piḷḷai-t-tamiḷ, q.v.;
பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தில் தலைவனைத் தாலாட்டுதலைக் கூறும் பகுதி.
தாலப்பாக்கு
tāla-p-pākku,n. <>தாலம்+.Betel and areca nut given by the father of the bride to the bridegroom every morning and evening after he performs aupācaṉam, in marriage;
கலியாண நாள்களில் காலையும் மாலையும் ஔபாசனமானபிறகு மணமகனுக்கு ஓதியிடும் தாம்பூலம். Brāh.
தாலபத்திரம்
tāla-pattiram,n. <>tāla+.1. Palm leaf;
பனையோலை.
2. Palm-leaf used as an ear-ornament;
காதிலணியும் சுருளோலை. (W.)
தாலபத்திரி
tāla-pattiri,n. cf. tāla-patrī.Tree turmeric.
See மரமஞ்சள். (மலை.)
தாலபீசநியாயம்
tāla-pīca-niyāyam,n. <> id.+.Nyāya of palm and its seed.
See பீசாங்குரநியாயம்.
தாலபோதம்
tāla-pōtam,n. <>sthala-pōta.Tanner's cassia.
See ஆவிரை. (மலை.)
தாலம்
1
tālam,n. <>tāla.1. Palmyrapalm.
See பனை. (பிங்.) தாலமுயர் கொடியினன் (பார்த.குரு.141)
2. A kind of areca-palm.
See கூந்தற்கழகு. (பிங்.)
3. Talipot-palm;
கூந்தற்பனை. (மலை.)
4. (Akap.) Palmyra leaf-stalk shaped like a horse.
See மடன்மா. தாலத் திவர்க (வெங்கைக்கோ. 110).
5. The seventeenth nakṣatra.
See அனுஷம். தாலந் தொழுத் தருமதி தச்சன் (விதான. பஞ்சாங்க. 20).
6. Honey;
தேன். (சங். அக.)
தாலம்
2
tālam,n. <>sthala.1. Earth;
பூமி. தால முறைமையிற் பரிந்து காத்தான் (திருவாலவா. 36, 1).
2. World;
உலகம். தாலம் பதினாலும் (அரிச்.பு. நாட்.9).
தாலம்
3
tālam,n. <>tālu.Tongue;
நா. (பிங்.)
தாலம்
4
tālam,n. <>sthāla.1. Eatingplate, porringer, usually of metal;
உண்கலம். பெருந்தோ டாலம் பூசன் மேவா (புறநா. 120).
2. Salver;
தட்டம். தாலப்பாக்கு.
தாலம்
5
tālam,n. cf. tāla-vurta.Elephant's ear, as shaped like a plate;
(தாலவடிவிலுள்ளது) யானைக்காது. (திவா.)
தாலம்பபாஷாணம்
tālampa-pāṣāṇam,n.A mineral poison;
பிறவிப்பாஷாணவகை. (W.)
தாலமூலி
tāla-mūli,n. <>tālamūlī.A plant common in sandy places. See நிலப்பனை. (மலை.)
.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1847 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், tāla, தாலம், tārai, tālam, palm, தாரை, leaf, tālu, பிங், areca, sthala, shaped, palmyra, kind, striped, அரிச், tongue, தாலகேதனன், தாலப்பருவம், தாலப்பாக்கு