சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1792
Word
English & Tamil Meaning (பொருள்)
தவலை
tavalai,n. [T. tapela, K. tapalē, M. tavala.]Metallic pot with a wide mouth;
அகன்றவாயுடைய பாத்திரவகை.
தவலைச்செம்பு
tavalai-c-cempu,n. <> தவலை+.A kind of vessel;
செம்புவகை.
தவலைப்பானை
tavalai-p-pāṉai,n. <> id. +.See தவலை.Tinn.
.
தவலையடை
tavalai-y-aṭai,n. <> id. +.Rice-cake cooked in a tavalai;
தவலையிலிட்டுச் சமைத்த அடைவகை.
தவலோகம்
tava-lōkam,n. <> tapōlōka.An upper world, sixth of mēl-ēḻ-ulakam, q.v.;
மேலேழுலகத்துள் ஆறாவது. தவலோகங் கடந்துபோய் (திருவிளை. மலயத்துவ. 28).
தவவிளக்கு
tava-viḷakku,n. <> தவம்1+.Penance, considered as a light illuminating the past, present and future;
[முக்காலத்தையும் விளக்கவல்லது] தவமாகிய தீபம். எதிர்வது மிறந்தது மெய்திநின்றது மதிர்வறு தவவிளக்கெறிப்பக் கண்டவன். (சீவக. 2850).
தவவீரர்
tava-vīrar,n. <> id. +.Sages, as heroic in performing austerities;
[தவம் இயற்றுவதில் வீரராயுள்ளார்] முனிவர். தவவீரர் திசை சிலம்பத் துதியோதி (சீவக. 3104).
தவவேடம்
tava-vēṭam,n. <> id. + vēṣa.Ascetic's garb or guise;
முனிவர் கோலம். தகவில தவவேடம் (கம்பரா. வனம்புகு. 24).
தவவேள்வி
tava-vēḷvi,n. <> id. +.See தவயாகம். (சி. சி. 8, 23, சிவஞா.)
.
தவழ்
-
தல்
tavaḻ-,4 v. intr. [K. tevaḷ.]1. To creep, crawl, as infants, lizards, snakes;
ஊர்தல். தங்கள்பாடியில் வளர்ந்துமா மருதிடைத் தவழ்ந்த . . . கருணையங்கடலே (பாரத. கிருட்டிணன். 91).
2. To leap and flow, as waves;
தத்துதல். ஓதங் கரைதவழ்நீர் வேலியுலகினுள் (பு. வெ. 8, 9).
3. To extend, traverse, spread on all sides;
பரத்தல். உடன்றுநோக்கும்வா யெரிதவழ.(புறநா. 38, 5).
தவழ்கரடி
tavaḻ-karaṭi,n. <> தவழ்+.Badger, Indian ratel, Mellivora indica, as a creeping bear;
விலங்குவகை.
தவழ்சாதி
tavaḻ-cāti,n.<> id. +.Class of creatures that move slowly on all fours;
ஊர்ந்துசெல்லும் உயிரினம். (சூடா.)
தவழ்புனல்
tavaḻ-puṉal,n. <> id. +.Water of a stream flowing gently;
மெல்லச் செல்லும் ஆற்றுநீர். தவழ்புனலிருதூணி. (தைலவ. தைல.13).
தவழ்வன
tavaḻvaṉa,n. <>id.See தவழ்சாதி.
.
தவழவாங்கிக்கட்டு
-
தல்
tavaḻa-vāṅki-k-kaṭṭu-,v. tr. <> id. +. (J.)1. To tie a bullock's neck to its forelegs to prevent straying;
மாட்டுக் காலைக் கழுத்துடன் பிணைத்துத் தளைதல்.
2. To tie a string binding the neck of a boy and his toe together, as a punishment;
தண்டனையாக சிறுவரின் கால்விரலையும் கழுத்தையும் கயிற்றால் பிணைத்தல் .
தவழவாங்கு
-
தல்
tavaḻa-vāṅku-,v. tr. <> id. +.1. To deprive a person of all his property, holding him down and robbing him;
ஒருவனைக் குனியவைத்து இமிசித்து அவன் சொத்து முழுமையும் அபகரித்தல் (J.)
2. To weary a person by overwork;
மிகுதியாக வேலைகொடுத்து ஒருவனை வாட்டுதல். Loc.
தவளசத்திரம்
tavaḷa-cattiram,n. <> dhavala + chatra.White umbrella, one of the insignia of royalty;
அரசர்க்குரிய வெண்கொற்றக்குடை. தவளசத்திரத்தையுமுடைய வேந்தற்கு. (பு. வெ. 9, 23, உரை).
தவளத்தொடை
tavaḷa-toṭai,n. <> தவளம்+.Garland of tumpai flowers;
தும்பைமாலை. (காளத். உலா.132.)
தவளம்
tavaḷam,n. <> dhavala.1. White; ash -colour, grey;
வெண்மை. தவளவாணகை கோவல னிழப்ப (சிலப். 4, 55).
2. White pepper, the mature seed of black pepper;
வெண்மிளகு. (மலை).
3. Camphor;
கர்ப்பூரம். (யாழ். அக.)
4. An arsenic;
சங்கபாஷாணம். (யாழ். அக.)
தவளமிருத்திகை
tavaḷa-miruttikai,n. <>id. +.Lime;
சுண்ணாம்பு. (யாழ். அக.)
தவளிதம்
tavaḷitam,n. <> dhavalita.Whiteness;
வெண்மை. (w.)
தவளை
tavaḷai,n. <> தவ்வு-. [K. M. tavaḷa.]Animals of the frog and toad variety, Batrachia ecandata;
நீர்வாழ்சாதிவகை. தவளைத் தண்டுறை கலங்கப் போகி (பெருங். மகத. 3, 21) .
தவளைக்கல்
tavaḷai-k-kal,n. <> தவளை+.Laterite;
சொறிக்கல். (w.)
தவளைக்காய்
tavaḷai-k-kāy,n. <> id. +.1. See தவளை. Madr.
.
2. Flat tile ricochetting on the water;
¢நீரில் தத்திச்செல்லும்படி எறியுங் கல்.
3. Swelling of the biceps, as caused by a blow;
புடைத்தல் முதலியன செய்யும்போது மேற்கையில் எழும்பித் தோன்றிமறையுந் தன்மையுள்ள சதைத்திரட்சி.
தவளைக்கால்
tavaḷai-k-kāl,n. <> id. +.See தவளைக்குரங்கு. (W.)
.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1792 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், tavalai, tava, tavaḻ, tavaḷai, tavaḷa, தவளை, யாழ், தவலை, dhavala, pepper, person, வெண்மை, தவளம், water, முனிவர், தவவீரர், சீவக, தவவேடம், தவழ், tavaḻa, தவழ்சாதி, neck