சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1757
Word
English & Tamil Meaning (பொருள்)
தமிழ்ப்படுத்து
-
த்தல்
tamiḻ-p-paṭuttu-,v. tr. <>id. +.To translate into Tamil;
பிறமொழியிலுள்ளதனைத் தமிழில் மொழிபெயர்த்தல்.
தமிழ்மருந்து
tamiḻ-maruntu,n. <>id. +.Medicine prepared according to the tamil medical system, dist. fr. ciṅkaḷa-maruntu;
தமிழ்மருத்துவநூல்களிற் கூறியவாறு செய்யப்பட்ட மருந்து.
தமிழ்மலை
tamiḻ-malai,n. <>id. +.Mount Potiyam in Tinnevelly, District;
திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள பொதியமலை. (சங்.அக.)
தமிழ்மறை
tamiḻ-maṟai,n. <>id. +.See தமிழ்வேதம். பன்னு தமிழ்மறையாம் பதிகம் பாடி (பெரியபு. திருஞான. 319).
.
தமிழ்முத்தரையர்கோவை
tamiḻ-mut-taraiyar-kōvai,n. <>id. +.A kōvai poem on certain tamil chiefs called Muttaraiyar;
முத்தரையர் என்ற தமிழ்த்தலைவர்மேல் இயற்றப்பெற்ற கோவை நூல். (யாப். வி. 486.)
தமிழ்முனிவன்
tamiḻ-muṉivan,n. <>id. +.Agastya, as the sage who wrote the first tamil grammar;
[தமிழ் மொழியை இலக்கணத்தாற் செப்பஞ்செய்த முனிவன்] அகத்தியன். ஒண்டமிழ் முனிவனுண்ண (கந்தபு. சூரபன். வதை. 289).
தமிழ்வாணன்
tamiḻ-vāṇaṉ,n. <>id. +.Tamil poet or scholar;
தமிழ்ப்புலவன். தெள்ளு தமிழ்வாண ரிசைவாணர் சூழ (திருவாலவா.57, 22).
தமிழ்விரகன்
tamiḻ-virakaṉ,n. <>id. +.Saint Sambandha, as proficient in Tamil;
[தமிழ் வல்லவன்] See திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். தமிழ்விரகன மொழிகள் (தேவா. 132, 11).
தமிழ்வேதம்
tamiḻ-vētam,n. <>id. +.1. The Kuṟaḷ of Tiruvaḷḷuvar;
திருவள்ளுவர் திருக்குறள்.
2. Tēvāram and other sacred hymns of the šaivas;
தேவாரம் முதலிய சைவத்திரு முறைகள். தமிழ்வேதம் பாடினார் (பெரியபு. திருஞான. 260).
3. Tivya-p-pirapantam by Nammāḻvār;
நம்மாழ்வார் அருளிச்செய்த திவ்யப்பிரபந்தகள். தமிழ்வேத பாராயணா சடகோபா (அஷ்டப். திருவேங். மா. காப்பு).
தமிழ்வேளர்கொல்லி
tamiḻ-vēḷar-kolli,n. <>id. +. (Mus.)A secondary melody-type of the marutam class;
மருதயாழ்த்திறவகை. (பிங்.)
தமிழக்கூத்து
tamiḻa-k-kūttu,n. <>id. +.Tamilian system of dance;
தமிழ் நாட்டுக்குரிய கூத்து (தொல். எழுத். 385, உரை.)
தமிழகம்
tamiḻ-akam,n. <>id. +.The Tamil country;
தமிழ்நாடு. வையக வரைப்பிற் றமிழகங் கேட்ப (புறநா. 168, 18).
தமிழப்பல்லவதரையர்
tamiḻa-p-palla-va-taraiyar,n. <>id. +.The Pallavas of the Tamil country;
தமிழ்நாட்டுப் பல்லவவரசர். (நன். 164, மயிலை.)
தமிழர்
tamiḻar,n. <>E.Tumbler, drinking cup;
விளிம்பில்லாத தீர்த்தபாத்திரம். Loc.
தமிழவண்ணான்
tamiḻa-vaṇṇāṉ,n. <>தமிழ் +.Washerman of caste people;
உயர்சாதியார்க்கு வெளுக்கும் வண்ணான். (E. T. vii, 317.)
தமிழறியும்பெருமாள்கதை
tamiḻ-aṟiyum-perumāḷ-katai,n. <>id. +.A prose work in Tamil;
ஒரு தமிழ் வசனநூல்
தமிழன்
tamiḻaṉ,n. <>id.1. One whose mother-tongue in Tamil;
தமிழைத் தாய்மொழியாக உடையவன்.
2. Tamilian, as dist. fr. āriyaṉ;
ஆரியனல்லாத தென்னாட்டான். ஆரியன் கண்டாய் தமிழன்கண்டாய் (தேவா. 744, 5).
3. Caste man, as dist.
.
தமிழாகரன்
tamiḻ-ākaraṉ,n. <>id. + ākara.Saint Sambandha, as the mine of Tamil learning;
[தமிழ்க்கு நிலைக்களமானவன்] See திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். தமிழாகரன்றன் புகலி (பதினொ. ஆளுடை. 35).
தமிழியல்வழக்கு
tamiḻ-iyal-vaḻakku,n. <>id. +.A system of love-marriage set forth in ancient Tamil works;
பண்டைக்காலத்துத் தமிழ்நூல்களிற் கூறப்படும் காமக்கூட்டம். தமிழியல் வழக்கினன் றணப்புமிகப் பெருக்கு (பெருங். வத்தவ. 17, 67).
தமிழோர்
tamiḻōr,n. <>id.1. The Tamils;
தமிழ் மக்கள்.
2. Tamil poets or scholars;
தமழ்¢ப் புலவர். மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் (நீதிநெறி. 7).
தமுக்கடி
-
த்தல்
tamukkaṭi,v. intr. &. tr. <>தமுக்கு +.1. To tomtom, publish orders by beat of drum;
பறைசாற்றிச் செய்தியறிவித்தல்.
2. To give unnecessary publicity to a news;
அனாவசியமாய்ப் பிறருக்கு அறிவித்தல். Colloq.
தமுக்கம்
tamukkam,n.1. [M. tamukkam.] Place whence elephants are sent together to battle;
யானைகளைப் போர்க்கு அனுப்பும் தாவளம். (w.)
2. [T. tamagamu.] Summer house, royal pavilion, as the Nāyak building at Madura;
மதுரையில் நாயகவரசர் கட்டியது போன்ற வசந்த மாளிகை.
தமுக்கு
tamukku,n. <>U. tamk.Drum for publishing orders;
செய்தி தெரிவிக்க முழக்கும் ஒருகட் பறை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1757 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், tamil, tamiḻ, தமிழ், தமிழ்வேதம், dist, system, tamiḻa, tamilian, country, தமிழர், orders, tamukkam, drum, தேவா, தமுக்கு, caste, saint, பெரியபு, maruntu, த்தல், திருஞான, taraiyar, திருஞானசம்பந்தமூர்த்தி, sambandha, kōvai, நாயனார்