சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1618
Word
English & Tamil Meaning (பொருள்)
செவிமடல்
cevi-maṭal,n. <>id. +.1. External ear ;
காதின் வெளியுறுப்பு. திருடன் அவள் செவிமடலோடு நகையை அறுத்துக்கொண்டு போய் விட்டான்.
2. See செவிமலர். Loc.
.
செவிமடு
-
த்தல்
cevi-maṭu-,v. tr.<>id. +.1. To drink in by the ears, hear ;
கேட்டல். மாருதி வினயவார்த்தை செவிமடுத் தமிழ்தின் மாந்தி (கம்பரா. விபீடண. 106) .
செவிமத்திபம்
cevi-mattipam,n. <>id. + madhyama.See செவிமந்தம். Loc.
.
செவிமந்தம்
evi-mantam,n. <>id. +.Dullness of hearing, deafness ;
காதுமந்தம். (யாழ். அக.)
செவிமலர்
cevi-malar,n. <>id. +.1. An ear-ornament of women;
மகளிர் காதணிவகை. (சூடா.)
2. Gold or silver ears put on idols on special occasions;
தெய்வத்திருமேனிகளிற் சாத்தும் கர்ணபத்திரம்.
3. Gold or silver ears presented as votive offerings by persons recovering from diseases of the ear;
காதுநோய் நீங்கியதுபற்றிப் பிரார்த்தனையாகச் செலுத்தும் செவியுருவம்.
செவிமலர்ப்பூ
cevi-malar-p-pū,n. <>id. +.See செவிமலர், 1.
.
செவிமறை
cevi-maṟai,n. <>id. + மறு.Bull having a spot in its ears ;
செவியில் மறுவையுடைய எருது. செவிமறை . . . நுண்பொறி வெள்ளை (கலித். 101) .
செவிமாட்டு
-
தல்
cevi-māṭṭu-,v. tr. <>id. +.To force into one's ear ;
பிறர்காதில் வலிய நுழைத்தல். கற்றன கல்லார் செவிமாட்டி (நீதிநெறி. 25) .
செவியடி
-
த்தல்
cevi-y-aṭi-,v. intr.<> id. +.To flap the ears, as an elephant;
சாதாட்டுதல். (W.)
செவியடி
cevi-y-aṭi-,n. <>id. +.1. Temple, the part about the front of the ear;
காதின் அடிப்பகுதி. கண்டிடுஞ் செவியடிப்பேர் சூளிகை (சூடா. 3, 8)
2. Place where grain is temporarily stored on the threshing-floor immediately after it is threshed;
களத்தில் கதிரடித்தவுடன் நெற்பட்டரை வைத்திருந்த இடம். Tj.
செவியம்
ceviyam,n.See செவ்வியம். (W.)
.
செவியறிவு
cevi-y-aṟivu,n. <>செவி +.See செவியறிவுறூஉ. ஒண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை. (காரிகை. செய். 15) .
.
செவியறிவுறுத்து
-
தல்
cevi-y-aṟivuṟut-tu-,v. tr. <>செவியறிவு + உறுத்து-.To give advice, counsel ;
நல்லறிவு புகட்டுதல். மந்திரத்தை நல்கி . . . செவியறிவுறுத்தல் செய்தான் (கந்தபு. அசுரர்யாக. 33) .
செவியறிவுறூஉ
cevi-y-aṟivuṟūu-,n. <>id. + id.1. Instruction in the path of virtue, given to kings, etc.;
அரசர் முதலியோர்க்குச் செவிக்கண் நிற்கக்கூறும் நீதி. வாயுறைவாழ்த்தே செவியறிவுறூஉ (தொல். பொ. 423).
2. (Puṟap.) Theme of instructing the king in the path of virtue;
அரசர்க்கு நல்லறிவுபுகட்டுதலைக் கூறும் புறத்துறை. (பு. செ. 9, 33.)
3. See செவியறிவுறூஉமருட்பா. (தொன். 283.)
.
செவியறிவுறூஉமருட்பா
cevi-y-aṟivuṟūu-maruṭ-pā,n. <>id. + id. +.Poem in maruṭpā metre instructing to king in the path of virtue;
அரசர்க்கு நீதிமுறைகளைக் கூறுவதும் மருட்பாவால் அமைந்ததுமாகிய ஒரு பிரபந்தம். (காரிகை, செய்.15, உரை) .
செவியறை
cevi-y-aṟai,n. <>செவி+ அறு-.1. See காதறை. (நன்.139, மயிலை.)
.
2. Deaf person;
காதுகேளாதவன். (W.)
செவியன்
ceviyaṉ,n. prob. id. [M. ceviyaṉ.]Hare ;
முயல். Nā.
செவியான்
ceviyāṉ,n. <>id.A kind of small centipede believed to get into the ears and cause pain ;
காதுக்குட் சென்று துன்புறுத்தும் பூரான் வகை .
செவியிலி
cevi-y-ili,n. <>id. +.See செவியறை. (நன். 283, மயிலை.)
.
செவியுறு
-
தல்
cevi-y-uṟu-,v. tr. <>id. +.To hear, listen to ;
காதுகொடுத்துக்கேட்டல். யாதுமொன்று செவியுற்றிலார் (கம்பரா. நாகபாச. 68) .
செவியுறை
cevi-y-uṟai,n.<>id. +.1. Medicine for the ear;
காதுக்கிடும் மருந்து.
2. See செவியறிவுறூஉ, 1. செவியுறைதானே, பொங்குதலின் றிப் புரையோர் நாப்ப ணவிதல் கடனெனச் செவியுறுத்தன்றே (தொல். பொ. 426).
.
செவியுறையங்கதம்
cevi-y-uṟai-y-aṅkatam,n. <>செவியுறை +.A verse reproving a king for his faults with a view to reclaiming him to a sense of his duty ;
அரசர்க்கு உறுதிகூறும் நோக்குடன் அறிஞர்கூறும் வசைச்செய்யுள். (தொல். பொ. 440, உரை) .
செவியேறு
cevi-y-ēṟu-,n. <>செவி + ஏறு-.Hearsay ;
கேள்வி. அவன் சொல்லக் கேட்ட செவியேற்றாலே சொல்லுகிறாளிறே (ஈடு;10, 3, 1) .
செவிரம்
ceviram,n. prob. šaivala.A class of aquatic plant ;
ஒருவகைப் பாசி. (திவா.)
செவிலி
cevili,n.1. See செவிலித்தாய். தாயெனப் படுவோள்செவிலி யாகும் (தொல். பொ. 124).
.
2. Elder sister;
முன்பிறந்தாள். (பிங்.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1618 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், cevi, ears, தொல், செவியறிவுறூஉ, king, path, செவி, செவிமலர், அரசர்க்கு, virtue, instructing, காதின், செவியறிவுறூஉமருட்பா, செவியுறை, uṟai, prob, ceviyaṉ, மயிலை, செவியறை, செய், சூடா, gold, malar, செவிமந்தம், கம்பரா, silver, செவிமறை, காரிகை, த்தல், செவியறிவு, aṭi, செவியடி, aṟivuṟūu