சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1609
Word
English & Tamil Meaning (பொருள்)
செல்லம்
cellam,n. <>செல்வம்.1.Opulence, prosperity, fortune;
ஐசுவரியம். செல்லஞ் செருக்குகிறது, வாசற்படி வழுக்குகிறது. (W.)
2. Private treasury, as of a king;
சொந்தப் பொக்கிஷம். Nā.
3. See செல்லப்பேச்சு, 2. இந்தச் செல்வமெல்லாம் இங்கே நடவாது.
.
4. Amusement, pastime;
வினோதம். (W.)
5. [M. callam.] See செல்லப்பெட்டி. Tj.
.
6. Indulgence;
இளக்காரம். Colloq.
செல்லம்பொழி
-
தல்
cellam-poḻi-,v. intr. <>செல்லம்+.1. To be happy and prosperous;
செல்வமாய் இருத்தல். அந்த ஊர் செல்லம்பொழிகிறது. Loc.
2. To play merrily; to be frolicsome, jovial;
மகிழ்ந்து விளையாடுதல்.
செல்லமடி
cella-maṭi,n. <>id. +.Premature udder of a heifer;
இளமையிற்பெருத்த கன்றுமடி . (J.)
செல்லமடிப்பு
cela-maṭippu,n. <>id. +.Folds of the abdomen, due to luxurious living ;
செல்வச் செழிப்பில் விழும் வயிற்றுமடிப்பு .
செல்லரி
-
த்தல்
cel-l-ari-,v. intr. <>செல் +.To be eaten by white ants ;
கறையானால் தின்னப்படுதல். செல்லரித்தவோலை செல்லுமோ (அஷ்டப். திருவரங். கலம். 53) .
செல்லல்
cellal,n. <>செல்-.1. Sorrow, suffering, affliction;
துன்பம். (தொல். சொல். 302.)
2. Disgust;
வெறுப்பு. (W.)
3. [T. jella.] Fresh-water fish, yellowish, attaining 3 in. in length, Etroplus maculatus;
மூன்றங்குலநீளமும் மஞ்சணிறமும் உள்ள நன்னீர் மீன்வகை.
செல்லவண்டி
cella-vaṇṭi,n. <>செல்லம் + பண்டி.See செல்லத்தொந்தி .
.
செல்லவயிறு
cella-vayiṟu,n. <>id. +.See செல்லத்தொந்தி.
.
செல்லவை
-
த்தல்
cell-vai-,v. tr. <>செல்- +.To pass, as a base coin;
செல்லாத நாணயத்தைச் செலாவணியாக்குதல்.
செல்லன
cellaṉ,n. <>செல்லம்.1. See செல்லப்பிள்ளை, 1, 2.
.
2. Wealthy person;
செல்வமுள்ளவன். செல்லன் சொல்லுக்கஞ்சான், அழகன் நடைக்கஞ்சான். Colloq.
செல்லா
-
தல்
cel-l-ā-,v. intr. <>செல் + ஆ-.1. To be paid or discharged, as loan;
கடன் தொகை செலுத்தப்படுதல்.
2. To be dead and gone;
இறந்துபோதல். அவர் செல்லானார். Loc.
செல்லாக்காசு
cellā-k-kācu,n. <>செல்- + ஆ neg. +. [K. sallada-kāsu.]1. Coin that will not pass; base coin;
செலாவணியாகாத பணம்.
2. One who has lost credit or influence;
நாணயஞ் செல்வாக்குக்களை இழந்தவன். (W.)
3. See செல்லல், 3.
.
4. A medicinal herb;
மருந்துப்பச்சிலை வகை. செல்லாக்காசில் வைத்துச் சிறுசெருப்படியைக் கொடுக்க.
செல்லாக்காலம்
cellā-k-kālam,n. <>id. + id. +.1. Time when one's influence is gone, as by loss of office, reputation, etc.;
செல்வாக்கு நீங்கின காலம்.
2. Decrepit, old age;
தள்ளாத கிழப்பருவம்.
செல்லாநெறி
cellā-neṟi,n. <>id. + id. +.Aerial region, as impassable;
[செல்லுதற்கரிய வழி] ஆகாயம். செல்லாநெறி யேறினர் (அரிச். பு. விவாக. 59).
செல்லாமை
cellāmai,n. <>id. + id.1. Remaining, stopping;
பிரிந்துபோகாமை. செல்லாமை யுண்டே லெனக்குரை (குறள், 1151).
2. Poverty;
வறுமை. செல்லாமைசெவ்வனேர் நிற்பினும் (நாலடி, 148).
3. Inability;
வலியின்மை. Loc.
4. Unavoidable necessity, inevitability;
செய்யாதிருக்கக்கூடாமை. என் செல்லாமையாலே ஏத்தினேன் (ஈடு, 4, 3, 10).
செல்லாய்
cellāy,n. <>U. sellā.A kind of muslin; See சல்லா. Loc.
.
செல்லாயி
cellāyi,n.A village goddess;
ஒரு கிராமதேவதை.
செல்லாவாழ்க்கை
cellā-vāḻkkai,n. <>செல்- + ஆ neg. +. [K. salladabāḻke.]Wretched life, life of poverty;
வறுமை வாழ்வு. சில்விலைக்கிடூஉஞ் செல்லா வாழ்க்கையர் (பெருங். உஞ்சைக். 55, 49) .
செல்லாவிடம்
cellā-v-iṭam,n. <>id. + id. +.Straitened circumstances ;
வறுமைக்காலம். செல்லாவிடத்துங் குடிப்பிறந்தார் செய்வன (நாலடி, 149) .
செல்லாறு
cel-l-āṟu-,n. <>id. +.The proper or advisable course, the correct or the right path ;
கைக்கொள்ளும் முறை. இருளற விளங்குஞ் செல்லா றிதுவென (பெருங். நரவாண. 7, 90-91) .
செல்லான்
cellāṉ,n.See செலான். Loc.
.
செல்லானகணக்கு
cel-l-āṉa-kaṇakku,n. <>செல் + ஆ- +.Paid-off account;
தீர்ந்துபோன கணக்கு .
செல்லி
celli,n. <>செல்லம்.1. See செல்லப் பெண். தங்கையான செல்லி மங்கையர்க்குள் நல்லி (இராமநா. ஆரணி. 12).
.
2. See செல்லாயி.
.
செல்லிடம்
cel-l-iṭam,n. <>செல்- +.Prosperous circumstances;
பொருளுள்ள காலம். செல்லிடத்துஞ் செய்யார் சிறியவர் (நாலடி, 149).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1609 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், செல், செல்லம், cellā, coin, நாலடி, செல்லா, cella, intr, செல்லாமை, poverty, வறுமை, life, circumstances, செல்லி, iṭam, பெருங், செல்லாநெறி, செல்லாயி, paid, த்தல், prosperous, colloq, cellam, செல்லல், செல்லத்தொந்தி, influence, base, pass, காலம்