தாவரவியல் :: கனி
41. விதையிலுள்ள மூன்று பகுதிகள் யாவை?
விதையுறை, விதையிலை, முளைக்கரு.
42. விதையிலுள்ள ஒவ்வொரு பகுதியின் வேலை யாது?
1. விதையுறை - பாதுகாப்பு.
2. விதையிலைகள்- முளைக்கும் கருவிற்கு உணவளிக்கின்றன.
3. முனைவேர் - வேராகிறது.
4. முளைக்குருத்து - தண்டாகிறது.
43. விதைப்பண்ணைத் திட்டம் என்றால் என்ன?
வேளாண்மையில் விளைச்சளைப் பெருக்க மிக அடிப்படையானவை மூன்று.
1. மண்
2. உரம்
3. தகுதியுள்ள விதை.
1996 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட விதைச்சட்டப்படி இது செயற்படுகிறது. இத்திட்டத்தில் விதைப்பண்னை, அடிப்படை விதைப்பண்ணை, துறை, விதை நிலையம் ஆகிய மூன்றும் அமைந்து உழவர்களுக்குத் தகுதியான விதைகளை அளித்து வருகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனி - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் -