தாவரவியல் :: கனி
11. திரள் கனி என்றால் என்ன?
பல தனிச் சூலகங்கள் உள்ள ஒருதனிப் பூவிலிருந்து இது உண்டாவது. மனோரஞ்சிதத்தில் கனிகள் தனித்திருக்கும். சீதாப்பழத்தில் கனிகள் இணைந்திருக்கும்.
12. கூட்டுக்கனி என்றால் என்ன?
இது பூக்கள் நெருங்கியமைந்த ஒரு பூத்தொகுதியிலிருந்து உண்டாவது. எல்லாக் கனிகளின் கனி உறைகளும் இணைவதால், பார்பதற்கு ஒரு கனி போன்று தெரியும். எ.டு பலாப்பழம், அன்னாசிப் பழம்.
13. கனிகளின் பயன்கள் யாவை?
1. விலங்குகளுக்கு உணவு,
2. மனிதனுக்கும் உணவாக அமைவதால், பொருளாதார சிறப்புடையவை. வாழைப்பழம், மாம்பழம்.
14. மணிக்கனிக்கு ஒர் எடுத்துக்காட்டு தருக.
நெல். இதில் விதையுறையுடன் சூல்பைச் சுவர் சேர்ந்திருக்கும்.
15. சாற்றுக்கனி என்றால் என்ன?
கீழ்ச்சூல்பையிலிருந்து உண்டாகும் கனி, தக்காளி.
16. பிளவுறுகனிகள் என்றால் என்ன?
உலர்கனிகளின் ஒரு வகை. இவற்றில் சுவர் தெறிந்து விதைகள் வெளிவரும். இது பருப்புக்கனி. ஒரு புற வெடிகனி எனப்பலவகை. எ-டு கருவேலங்காய், எருக்கு வெண்டை
17. ஒட்டுக்கனி என்றால் என்ன?
மேலுறை, நடுவுறை, உள்ளுறை என மூன்று பகுதிகளைக் கொண்ட கனி, மா.
18. இதில் உண்ணக்கூடிய பகுதி எது?
நடுவுறையான சதைப்பகுதி.
19. சொறிக்கனிகளுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
பலாப்பழம், அன்னாசிப்பழம், நுனாப்பழம்.
20. பலாப்பழத்தின் பல பகுதிகள் யாவை?
அதன் மைய அச்சு பூக்காம்பு, உண்ணும் சுளைகள் இதழ்வட்டங்கள். களையிலுள்ள கொட்டையே உண் மைக்கனி. கொட்டையுள்ளவையே கனியுறை. பலாச் சக்கை என்பது மலட்டுப் பூக்கள் ஆகும். முட்களுள்ள தோல், புற உறை ஆகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனி - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்