தாவரவியல் :: கனி
31. பொய்ககனி என்றால்என்ன?
முந்திரிப் பழத்தின் சதைப் பகுதியும் ஆப்பிளின் சதைப்பகுதியும் பொய்கனி எனப்படும். உண்மைக்கனி முந்திரிக் கொட்டையும் ஆப்பிள் விதையுமாகும்.
32. மெய்க்கனி என்றால் என்ன?
சதைப்பகுதி விதையோடு சேர்ந்துள்ள பழம். எ டு மா.
33. கொடிமுந்திரி, ஆப்பிள் ஆகிய கனிகளில் காணப்படும் காடி யாது?
மாலிகக்காடி
34. இதன் சிறப்பென்ன?
கிரப் சுழற்சியின் ஒர் இன்றியமையாப் பகுதி.
35. தற்கனி என்றால் என்ன?
தற்கருவுறுவதால் உண்டாகும் கனி.
36. திரள்கனி என்றால் என்ன?
பல தனிச்சூலகங்களைக் கொண்ட ஒரு தனிப் பூவிலிருந்து உண்டாவது. மனோரஞ்சிதம், அன்னாசி.
37. மயிர்க்குஞ்சம் என்றால் என்ன?
இது உருவில் மாற்றமடைந்த புல்லிவட்டம். நேர்த்தியான மயிரிழைகள் விதைக்கு மேல் வளர்ந்து குதிகுடைபோல் இருக்கும். காற்றினால் பரவும் விதைகளில் இவ்வமைப்பு காணப்படும். எ-டு எருக்கு.
38. புற வளர்ச்சி (அலா) என்றால் என்ன?
கனிமேல் காணப்படும் படலப்புற வளர்ச்சி. தட்டையான சிறகமைப்பு. இது கனி காற்றில் பறக்க உதவுகிறது. வேம்பாடம்.
39. கூர்ச்சிகள் என்றால் என்ன?
கோதுமை, புல் முதலிய தாவரங்களின் பூ உமிகளைச் சுற்றியுள்ள வளர்ச்சிகள்.
40. விதை என்றால் என்ன?
கருவுற்ற சூலே விதை. இது ஒரு விதை இலைத் தாவரங்கள் மற்றும் இருவிதையுடைய தாவரங்களுக்கு மட்டுமே உள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனி - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, விதை, காணப்படும்