பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா விஷந்தி
கேசித்பீதா: ப்ராஞ்ஜலயோ க்ருணந்தி। ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்தஸங்கா: ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி: புஷ்கலாபி:॥ 11.21 ॥ |
தேவர்கள் உன்னில் பிரவேசிக்கிறார்கள். சிலர் பயத்தால் கைகூப்பி உன்னை புகழ்கிறார்கள். வாழ்க என்று கூறி முனிவர்களும் சித்தர்களும் உன்னை அழகிய துதிகளால் போற்றுகிறார்கள்.
ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா
விஷ்வேஷ்விநௌ மருதஷ்சோஷ்மபாஷ்ச। கந்தர்வயக்ஷாஸுரஸித்தஸங்கா வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஷ்சைவ ஸர்வே॥ 11.22 ॥ |
ருத்திரர்கள், ஆதித்தர்கள், வசுக்கள், சாத்தியர்கள், விசுவே தேவர்கள், அசுவினிகள், மருத்துக்கள், ஊஷ்மபர்கள், கந்தர்வர்கள், யட்சர்கள், அசுரர்கள், சித்தர்கள் எல்லோரும் திகைப்புடன் உன்னை பார்க்கிறார்கள்.
ரூபம் மஹத்தே பஹுவக்த்ரநேத்ரம்
மஹாபாஹோ பஹுபாஹூருபாதம்। பஹூதரம் பஹுதம்ஷ்ட்ராகராலம் த்ருஷ்ட்வா லோகா: ப்ரவ்யதிதாஸ்ததாஹம்॥ 11.23 ॥ |
பெரிய கைகளை உடையவனே ! பல முகங்கள், கண்கள், கைகள், தொடைகள், பாதங்கள், வயிறுகள், பயமுறுத்துகின்ற வளைந்த பல பற்கள் என்று காட்சியளிக்கின்ற உனது பெரிய உருவத்தை கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. நானும் நடுங்குகிறேன்.
நப:ஸ்ப்ருஷம் தீப்தமநேகவர்ணம்
வ்யாத்தாநநம் தீப்தவிஷாலநேத்ரம்। த்ருஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதிதாந்தராத்மா த்ருதிம் ந விந்தாமி ஷமம் ச விஷ்ணோ॥ 11.24 ॥ |
மகாவிஷ்ணுவே ! பல நிறங்களுடன் வானை தொடுவது போல் பிரகாசிக்கின்ற, திறந்த வாய்களை உடைய , கனல் வீசும் பெரிய கண்களை கொண்ட உன்னை கண்டு என் மனம் நடுங்குகிறது. தைரியமும் மன அமைதியும் என்னை விட்டு அகல்கின்றன.
தம்ஷ்ட்ராகராலாநி ச தே முகாநி
த்ருஷ்ட்வைவ காலாநலஸந்நிபாநி। திஷோ ந ஜாநே ந லபே ச ஷர்ம ப்ரஸீத தேவேஷ ஜகந்நிவாஸ॥ 11.25 ॥ |
தேவாதிதேவா ! பயமுறுத்துகின்ற கோரபற்கள் உடையதும் பிரளயகால அக்னிக்கு ஒப்பானதுமான உனது முகங்களை கண்டதும் என் மனம் நிலைகுலைந்து விட்டது. எனக்கு திசைகள் தெரியவில்லை, உலகிற்கு ஆதாரமாணவனே ! அருள் புரிவாய்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, உன்னை, த்வாம், பகவத்கீதை, பதினொன்றாவது, விஷ்வரூபதர்ஷந, அத்தியாயம், யோகம், ஸ்ரீமத், பெரிய, பயமுறுத்துகின்ற, மனம், உனது, கண்டு, இந்து, bhagavad, gita, தேவர்கள், த்ருஷ்ட்வா