ஆலு மஞ்சூரியன்

தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு - 2, சோளமாவு - அரை கப், மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்,பச்சரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், தூள் உப்பு - தேவைக்கேற்ப, மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டுவிழுது - 1 டீஸ்பூன், கேசரி பவுடர் - 1 சிட்டிகை, சோயா சாஸ் - 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1,பச்சை மிளகாய் - 2, நறுக்கிய மல்லித்தழை - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒன்றரை கப்.
செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை நீக்கி, சுண்டு விரல் அளவு நீளம் + கனத்துக்கு துண்டுகளாக நறுக்கிதண்ணீரில் நன்கு அலசி எடுக்கவும். ஒரு அகலமான தட்டில் மைதா, சோளமாவு, பச்சரிசி மாவு, உப்பு,மிளகாய்தூள், இஞ்சி பூண்டு விழுது, கேசரி பவுடர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பின் சிறிது தண்ணீர்தெளித்து நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளுடன் சேர்த்து பிசறி அரை மணி நேரம் ஊறவிடவும். பின்வாணலியில் எண்ணெயைக் காயவைத்து அதில் பிசறிய உருளைக்கிழங்கு துண்டுகளை (பத்துப்பத்துதுண்டுகளாக) போட்டு மொறுமொறுவென வெந்ததும் எடுக்கவும். (அடுப்பை குறைந்த தணலில் வைத்துக்கொள்ளவும்).பின்னர் வாணலியில் உள்ள எண்ணெயை வடித்துவிட்டு, 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சிறுசதுரங்களாக நறுக்கிய வெங்காயம் + சிறு வளையங்களாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதில்சோயா சாஸ் சேர்த்து ஒரு கிளறு கிளறி, வறுத்து வைத்துள்ள கிழங்குத் துண்டுகளை அதில் கொட்டி மேலும்கிளறி இறக்கி மல்லித்தழை பொடியாக நறுக்கியதைத் தூவவும். அதன் மேல் நறுக்கிய சிறு எலுமிச்சை துண்டைவைத்து அலங்கரித்து பரிமாறலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆலு மஞ்சூரியன், 30 வகையான கிழங்கு சமையல், 30 Type Kizhangu Varities, நறுக்கிய, டீஸ்பூன், சேர்த்து, மாவு, உருளைக்கிழங்கு, Recipies, சமையல் செய்முறை