சிரிக்கலாம் வாங்க 80 - சிரிக்கலாம் வாங்க

'அவரு போலி டாக்டர்'னு எப்படி சொல்றே?'
'பல் ஆடுதுன்னு சொன்னா 'ஆட்டோட' பல்ல ஏன் வச்சிருக்கீங்க அப்படிங்கிறாரே...
-***-
இன்ஸ்பெக்டர்.. என்னை உடனே லாக்-அப் -ல் வையுங்க..
ஏன்.. என்ன ஆச்சு..?
என் மனைவியை கட்டையால் தலையில் அடித்துவிட்டேன்..
செத்துட்டாங்களா..?
இல்லே.. கோபமா வந்துட்டு இருக்கா.. அதனாலதான் சொல்றேன்.. ப்ளீஸ்.. உடனே உள்ள வச்சு பூட்டுங்க..!!
-***-
பொண்ணு பார்க்க வந்த பையன் சொன்னத கேட்டதும் பொண்ணு வீட்டுக்காரங்க அவனுக்கு பைத்தியம்னு பொண்ணு கொடுக்க மாட்டேனுட்டாங்க. அவன் அப்படி என்ன சொன்னான்?
‘நான் கொஞ்சம் தனியா பேசணும் .பரவாயில்லையா ?’ னு சொன்னான்.
-***-
” ஆற்காட்டார் கத்திய தூக்கிகிட்டு மீன் சந்தைக்கு போறாரே ஏன்?”
” மின்வெட்டு இருக்கிறப்போ மீன்வெட்டும் இருக்கட்டுமேன்னுதானாம்!”
-***-
என் வாழ்க்கை இனிமேல் பிரகாசம் தான்
எப்படிச் சொல்றே
பல்பு கம்பெனியில வேலை கிடைச்சிருக்கே.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 78 | 79 | 80 | 81 | 82 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 80 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், பொண்ணு, என்ன, சொன்னான், உடனே, சொல்றே, kadi, நகைச்சுவை, சிரிப்புகள்