முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » சிறுவர் கதைகள் » பஞ்ச தந்திரக் கதைகள் » எருதும் சிங்கமும் - 4
பஞ்ச தந்திரக் கதைகள் - எருதும் சிங்கமும் - 4
இப்படி யெல்லாம் நரி கூறியதும் அந்த மாடு துயரத்துடன், சிங்க மன்னனின் இனிய சொல்லும், ஆதரவான பேச்சும், அன்புப் பார்வையும் எல்லாம் உண்மை என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசியில் அவன் என்னைக் கொன்றுவிட முடிவு செய்து விட்டானா? இது நீதியா? நியாயமா?’ என்று கேட்டது.
‘உனக்கு நமது மன்னன் வணக்கம் சொல்லிய தும், உன்னைத் தழுவிக் கொண்டதும், அருகில் வைத்து உபசாரங்கள் செய்ததும் எல்லாம், ஒரு நாள் கொன்று விடலாம் என்ற எண்ணத்தோடு தான்.
‘கடவுள் இருளைக் கடக்க விளக்கைப் படைத்தார். கடலைக் கடக்கத் தோணியை உண்டாக்கினார். ஆனால் தீயவர் நெஞ்சில் உள்ள வஞ்சகத்தைக் கடக்கத் தக்க எதையும் அவர் உண்டாக்க வில்லை,
‘யானையின் வெறியை அங்குசத்தால் அடக்கலாம். வெயிலின் கொடுமையை விசிறியால் தணிக்கலாம். அற்பர்களின் வெறியை அடக்க மட்டும் வழியில்லை. அவர்கள் செத்தால்தான் அது அவர்களோடு சேர்ந்து அழியும்.
பூவில் இருக்கும் தேனை உண்டு இன்பமாக வாழ்வதை விட்டு, யானையின் மதநீரை உண்ணப் போய் அதன் முறம் போன்ற காதினால் அடிபட்டுச் சாகும் வண்டு. அதுபோல் நல்லவர்கள் பேச்சைக் கேட்காமல், தீயவர்கள் சொல்வதைக் கேட்டு ஒழிந்து போவது துடுக்குடைய அரசர்களின் தன்மை.
‘தீயவர்களின் சேர்க்கையால் நல்லவர்களும் நட்டம் அடைவார்கள்; அதனால் ஒரு நன்மையும் வராது. ஒரு காகம், ஒர் ஒட்டகத்தை அழித்த கதையும் இதைப் போன்றது தான்.
கொடியவர்களோடு கூடியவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் உயிர்விட்டு ஒழிய வேண்டியது தான். மூர்க்கத்தனமுள்ள அரசர்கள் கையில் இறப்பதை விடப் போரில் இறப்பது சிறப்பாகும்.
போரில் உயிர் விட்டால் சுவர்க்கம் போகலாம் இல்லாவிட்டால் இந்த உலகத்தை ஆளலாம். வீணாக, ஒன்றுக்கும் பயனில்லாமல் உயிரை விட்டால், சொர்க்கமும் கிடைக்காது; பூமியும் கிடைக்காது; நரகத்தில் தான் போய்ச் சேர வேண்டும் .
பகைவர்களோடு போரிட்டு இறந்தவர்கள் இறந்தவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். உயிருக்குப் பயந்து கொண்டு உயிரோடு இருப்பவர்கள் வெறும் நடைப் பிணங்களேயன்றி வேறல்லர்.
அறிவில்லாதவர்கள், தங்களுக்கிருக்கும் பலத்தை வைத்துக் கொண்டு மற்றவர்களைச் சிறியவர்கள் என்று மதித்து விடுகிறார்கள். இது எப்படி யிருக்கிற தென்றால் சிட்டுக் குருவியை அற்பமென்று நினைத்து கடைசியில் கடலரசன் தன் வீராப்பு அடங்கியதைப் போலிருக்கிறது.’ என்று பல கதை களைக் கூறி, நரி காளை மாட்டுக்குக் கோபத்தை உண்டாக்கி விட்டது.
எல்லாவற்றையும் உண்மை என்று நினைத்துக் கொண்ட எருது , ஒப்புயர்வில்லாத அந்தச் சிங்கத்தைச் சண்டையிட்டுக் கொல்ல எப்படி முடியும்? அதற்கு ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும்’ என்று நரியைத் தானே கேட்டது.
சிங்கம் உன்னைக் கொல்ல வரும்போது, கோபத்துடன் வரும். அப்போது அதன் உடல் நடுங்கிக் கொண்டிருக்கும். வாயைப் பிளந்து கொண்டு கண்கள் சிவக்க அது பாய்ந்து வரும். அந்த சமயம் பார்த்து வாலைத் தூக்கிக் கொண்டு தலையையும் கொம்பையும் ஆட்டியபடி எதிரில் சென்று போரிடு’ என்று நரி வழி சொல்லியது.
இவ்வாறு எருதை முடுக்கிவிட்டு நரி, நேரே சிங்கத்திடம் சென்றது.
இன்று எருது தங்களைக் கொல்ல வருகிறது. அரசே, எச்சரிக்கையாயிருங்கள்’ என்று சொல்லி விட்டுச் சென்றது.
சிறிது நேரத்தில் எருது அங்கே வந்தது. அப்போது சிங்கம் கோபத்தோடு அதை உற்றுப் பார்த்தது. அதன் கண்கள் சிவந்திருந்தன. இதைக் கண்டதும், நம்மோடு சண்டை செய்யச் சிங்கம் தயாராக இருக்கிறது என்று நினைத்துக் காளைமாடு வாலைத் துக்கிக் கொண்டு கொம்பை ஆட்டியபடி ஒடி வந்தது.
சிங்கம் அதன் வாயைப் பிளந்து கொண்டு அதன் மேல் சீறிப் பாய்ந்தது. மண்ணும் விண்ணும் அதிர, கடலும் மலையும் அதிர, அவை ஒன்றொடொன்று மோதிப் போரிட்ட காட்சி பார்க்கப் பயங்கரமாயிருந்தது.
இரண்டு நரிகளும் இந்தப் பயங்கரமான காட்சியை ஒரு புதர் மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தன. காரணமில்லாமல் அவையிரண்டும் ஒன்றையொன்று உதைப்பதும் மோதுவதும் அறைவதும் கண்ட இரண்டாவது நரிக்கு மனம் பொறுக்கவில்லை.

அது, முதல் , நரியைப் பார்த்து, போதும், அரசர்க்குத் துன்பம் உண்டாக்குவது தெய்வத் துரோகம் அல்லவா? சண்டையை விலக்கி மீண்டும் நட்பை உண்டாக்கி விடுவதுதான் சரி.
உண்மை யில்லாமல் புண்ணியம் தேடுவோரும், உறவினர்களைக் கெடுத்துச் செல்வம் சேர்ப்போரும், பலாத்காரத்தினால் பெண்களை அடைவோரும், உயிருக்குயிரான இருவரைக் கெடுத்துத் தாம் வாழ நினைப்போரும் உலகில் இன்பமடைய மாட்டார்கள். துட்ட புத்தி கெட்டதைப் போலவும், இரும்பை எலி தின்ற தென்ற செட்டியைப் போலவும் துன்பமடைவார்கள். ஆகவே, நீ இப்போதே போய் அவர்கள் சண்டையை விலக்கி விடு என்று பலவாறாக எடுத்துச் சொல்லியது.
இதைக் கேட்ட முதல் நரி ஒருவாறாக மனம் தேறிச் சிங்கத்தை நோக்கிச் சென்றது. அதற்குள் சிங்கம் எருதைக் கொன்று விட்டது.
செத்துக் கிடந்த மாட்டைக் கண்டு சிங்கம் கண்ணிர் விட்டுப் புலம்பிக் கொண்டிருந்தது,
அருகில் சென்ற முதல் நரி, சிங்கத்தைப் பார்த்து, “சண்டைக்கு வந்தவனைத்தானே கொன்றிர்கள்? இதற்கு ஏன் அழ வேண்டும் அரசே?? என்று கேட்டது. .
ஒரு நன்மையும் தராத நச்சு மரமானாலும், நாம் வளர்த்ததை நாமே வெட்டுவதென்றால் உளம் பொறுக்குமோ, உலகம் புகழும் ஓர் அமைச்சனைக் கொல்லுகின்ற அரசனுக்குப் பெரும் கேடு வராதா?’ என்று கூறிச் சிங்கம் வருந்தியது.
‘அரசே, கடமைப்படி நடவாதவர்களையும், தன் சொல் கேளாத மனைவியையும், மனத்தில் கபடம் நினைத்திருக்கும் தோழனையும், பெரும் போரிலே புறமுதுகிட்டு ஓடும் சேனையையும், ஆணவ வெறி பிடித்திருக்கும் அமைச்சனையும் முன்பின் பாராமல் அழித்து விடுவதே சிறந்த நீதியாகும். இவர்களால் கிடைத்த இன்பத்தைப் பற்றி அரசர்கள் நினைத்துப் பார்க்க வேண்டியதில்லை.”
இப்படிப் பலவிதமாகக் கூறி, அந்தச் சிங்கத் தின் நெஞ்சில் இரக்கமே இல்லாமல் அடித்து விட்டது முதல் நரி.
பிறகு, இரண்டாவது நரியையும் சேர்த்துக் கொண்டு செத்துக் கிடந்த எருதின் உடலை இழுத்துச் சென்று காட்டின் வேறொரு பக்கத்தில் கொண்டு போய்ப் போட்டுத் தன் இனமாகிய நரிகளுக்கெல்லாம் விருந்திட்டுத் தானும் தின்று மகிழ்ந்திருந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எருதும் சிங்கமும் - 4 - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - கொண்டு, சிங்கம், தான், பார்த்து, சென்றது, கொல்ல, விட்டது, நினைத்துக், கேட்டது, உண்மை, எருது