முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » நீதிக் கதைகள் » மரியாதை இராமன் கதைகள் » ஆளுக்குத் தகுந்த சாட்சி
மரியாதை இராமன் கதைகள் - ஆளுக்குத் தகுந்த சாட்சி
கண்ணப்பன் என்பவனிடம் விலை உயர்ந்த இரத்தினக்கல் ஒன்று இருத்தது. ஒருமுறை அவன் தேச சஞ்சாரம் செல்ல வேண்டியிருந்தது. இரத்தினக் கல்னலத் தனக்குத் தெரிந்த நண்பனான சாமிக்கண்ணு என்பவனிடம் கொடுத்து, "நண்பா நான் தேசாந்திரம் போகிறேன். வருவதற்குப் பல மாதங்கள் ஆகும். அதுவரை இந்த இரத்தினக் கல்னலப் பத்திரமாக வைத்திருத்து நான் வத்ததும் கொடு" என்றான் கண்ணப்பன்.
சாமிக்கண்ணும் அத்த இரத்தினக் கல்லை வாங்கிக் கொண்டான். '
பல மாதங்கள் சென்றன.
கண்ணப்பன் தேச சஞ்சாரம் செய்து முடித்து விட்டு ஊகுக்குத் திரும்பி வத்தான். வந்தபின் ஒரு நாள் சாமிக்கண்ணுவின் வீட்டிற்குச் சென்று தன் இரத்தினக் கல்லைத் திகும்பக் கொடுக்குமாறு கேட்டான்.
"உன்னுனடய இரத்தினக் கல்லை தான் அப்பொழுதே திருப்பிக் கொடுத்து விட்டேனே" என்றான் சாமிக்கண்ணு.
கண்ணப்பன் மரியாதை இராமனிடம் சென்று முறையிட்டான்.

கண்ணப்பன் மரியாதை இராமனிடம் தன் வழக்கைக் கூறியதும் மரியாதை இராமன் சாமிக்கண்ணுவை அழைத்து வரச் சொன்னார்.
சாமிக்கண்ணு வந்ததும் "இவருடைய இரத்தினக் கல்லை தான் அப்பொழுதே திரும்பக் கொடுத்து விட்டேனே!' என்றான்.
"நீ இவரிடம் கொடுக்கும் போது சாட்சிகள் யாராவது இருந்தார்களா?" என்று கேட்டான் மரியாதை இராமன்.
"என் வீட்டுக்கு வழக்கமாக வரும் சலவைத் தொழிலாளியும், சுவரத் தொழிலாளியும், மண்பாண்டத் தொழிலாளியும் நான் இரத்தினக் கல்லை இவரிடம் கொடுக்கும் போது இருந்தார்கள். அவர்களைக் கூப்பிட்டுக் கேட்டால் உண்மையைச் சொல்வார்கள்" என்றான் சாமிக்கண்ணு.
மரியாதை இராமன், சாமிக்கண்ணு சொன்ன மூன்று பேரையும் அழைத்து வரச் சொன்னான். மூன்று பேரையும் தனித்தனி அறைகளில் சிறை வைக்கச் சொன்னான் மூவரிடமும் அவர்கள் பார்த்ததாகச் சொல்லும் இரத்தினக் கல்லைப் போல் களி மண்ணில் செய்து காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டான்.

சவரத் தொழிலாளி சவரக் கத்தி தீட்டும் சாணைக் கல்லைப் போலவும், சலவைத் தொழிலாளி துணி துவைக்கும் கல்லைப் போலவும், மண்பாண்டத் தொழிலானி வண்டி சக்கரம் போலவும், களிமண்ணால் செய்தார்கள்.
இவைகளைப் பார்த்த மரியாதை இராமன் அவர்கள் பொய் சாட்சி கூறுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டான்.
"சாமிக்கண்ணு, உன்னுடைய சாட்சிகள் சொல்வதிவிருந்து அவர்கள் இரத்தினக் கல்லையே பார்த்திராதவர்கள் என்று தெரிகிறது; உன் வாயால் நீ உண்மையைச் சொல்லாவிடில் உனக்குக் கடுந்தண்டனை தருவேன்" என்றான் மரியாதை இராமன்.
சாமிக்கண்ணு தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு இரத்தினக் கல்லைத் திருப்பிக் கொடுத்து விட்டான்.
மரியாதை இராமன் ஏமாற்றுக்கார சாமிக்கண்ணுவுக்கும், பொய்சாட்கி கூறிய மூவருக்கும் ஆளுக்கு ஜம்பது கசையடிகள் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆளுக்குத் தகுந்த சாட்சி - மரியாதை இராமன் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - இரத்தினக், மரியாதை, ", இராமன், கண்ணப்பன், சாமிக்கண்ணு, என்றான், தொழிலாளி, கல்லைப், கல்லை, கொடுத்து, நான், தொழிலாளியும், போலவும், போது, மூன்று, இராமனிடம், கல்லைத், திருப்பிக், சலவைத், மண்பாண்டத், கொடுக்கும்