பிறந்த எண் 6 - பிறந்த எண் பலன்கள்

சுக்கிரன் (Venus)
சிறப்புப் பலன்கள்
உலக சுகங்களை அனுபவிக்கப் பிறந்தவர்களான 6ஆம் எண்ணைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். இவர்களுக்கு இந்த பூ உலகம் சொர்க்கமாகத் தெரியும். இந்த வாழ்க்கை வாழ்வதற்கே என்று இன்ப உணர்வுடன் வாழ்பவர்கள் இவர்களே! அசுர குருவான சுக்கிரனின் ஆற்றலை கொண்டது இந்த எண். எனவே, இயற்கையிலேயே உடல் சுகம், போகங்கள், வாசனைத் திரவியங்கள், ஆபரணங்கள் (ஆண்கள்கூட) ஆகியவற்றை அனுபவிக்கும் ஆசையும், அதிர்ஷ்டமும் உண்டு! இவர்கள் கற்பனை வளமும், கலைகளின் பால் மிகுந்த ஈடுபாடும் (திமிழிணி கிஸிஜிஷி) போகப் பொருட்கள் மேல் நாட்டமும் உடையவர்கள். அழகிய பொருட்களையும், அலங்காரப் பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்ள விரும்புவார்திகள். அதிகம் செலவு செய்து, அழகான வீடு, பங்களா கட்டுவார்கள். பகட்டான வாழ்க்கையை நடத்த விரும்புவார்கள். ஓவியம், இசை, பாடல்கள், நாட்டியம் போன்றவற்றில் மிக்க ஈடுபாடு உண்டு. மற்ற கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் ஆதரவளிப்பார்கள். நண்பர்களுக்கு அடிக்கடி விருந்து கொடுத்து மகிழ்வார்கள். இவர்கள் மற்றவர்களைத் தங்கள் வசப்படுத்தி, தங்களது காரியங்களை முடித்துக் கொள்வதில் வல்லவர்கள். தங்களின் முன்னேற்றத்தின் மீதே கருத்தாக இருப்பார்கள். தங்களின் வசதியைப் பெருக்குவது எப்படி? பணத்தை இன்னும் பெருக்குவது எப்படி என்று சிந்தித்தே, காய்களை நகர்த்துவார்கள். 6 எண் வலுப்பெற்றால், ஆன்மீகத்திலும் வெற்றி அடைவார்கள்.
லாட்டரி, குதிரைப்பந்தயம் இவைகளில் மிகுந்த ஆர்வமும், அவற்றில் அதிர்ஷ்டமும் உண்டு. தங்களது சுயலாபத்திற்காகவே, அடுத்தவர்களுக்கு உதவி செய்வார்கள். எக்காரியமானாலும் நன்றாகச் சிந்தித்தே ஒரு முடிவுக்கு வருவார்கள். தேவையற்ற ரிஸ்க்குகளை எடுக்கத் தயங்குவார்கள். மந்திரங்கள், மாய தந்திரங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டு, அவற்றைக் காசாக்குவதில் வல்லவர்கள். இவர்கள் செல்வத்தைக் குவித்திடும், லட்சுமியின் புத்திரர்கள் ஆவார்கள். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையும் உண்டு. இன்பங்கள் துய்ப்பதில் சலிக்க மாட்டார்கள். அதற்கேற்றவாறு உடல் சக்தியும் மிகுந்திருக்கும். இவர்களது உருவம் அழகாக இருப்பதால் பெண்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள். அவர்களும் இவர்ளைப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்கமாட்டார்கள். இன்ப அனுபவங்களில் தீவிர ஈடுபாடு உண்டு. தலைமுதல் பாதம் வரை ஒரே சீராகவும், அழகாகவும் இருப்பார்கள். அழகான உடை, மற்றும் வாசனைத் திரவியங்கள் மூலம் தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்வார்கள். தாங்கள் வசிக்கும் இடத்தினையும் மிகவும் அழகாக வைத்துக் கொள்வார்கள்.
காதல் விஷயங்களில் அதிர்ஷ்டகாரமானவர்கள். அதிக காம குணம் இருப்பதால், ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். (எண்ணின் பலம் குறைந்தால் ஸ்திரீலோலர்கள் ஆகிவிடுவர்) இவர்களுக்கு நல்ல அழகும், குணங்களும் உள்ள கணவன்/ மனைவி அமைவர். தம்மிடமுள்ள கவர்ச்சியை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எனவே, திருமணமாகாதர்கள். கூடிய விரைவில் திருமணம் செய்து கொண்டால் இந்தப் பிரச்சினைகளிலிருந்து சமாளித்துக் கொள்ளலாம். பொதுவாக இந்த எண்காரர்களுக்கு உணவு, உடை, வீடு ஆகியவற்றில் குறைபாடுகள் வாராது. வசதிகளை எப்படியும் உருவாக்கிக் கொள்வார்கள்! பலருக்குப் பிறவியிலேயே அமைந்திருக்கும்.
சினிமா, டி.வி. ரேடியோ போன்றவற்றில் பெரும் புகழ்பெற்ற கலைஞர்களும் பேச்சாளர்களும் இவர்களே! இவர்கள் மற்றவர்களின் கலைத் திறமையைப் பாராட்டுவார்கள். பொறாமையும் பிடிவாதமும் உண்டு. கீழ்த்தரமானவர்கள் (எண்பலம் மிகவும் குறைந்தவர்கள்) பிறரை ஏமாற்றியும், வஞ்சித்தும் பிழைப்பார்கள். கெட்ட வழிகளில் துணிந்து செல்வார்கள். தங்களை நம்பியவர்களைக் கூட ஏமாற்றுவார்கள். இவர்களது மனதில் அதிக காமமும், பணத்தாசையும் இருக்கும்.
இவர்களுக்குக் குழந்தை பாக்கியம் நிறைய உண்டு! பெண் குழந்தைகள் அதிகம் உண்டு. பொதுவாக உலக கலைகளை அனுபவிக்கப் பிறந்தவர்கள் இவர்களே! இவர்களால் தான் உலகில் பழைய கலைகளும், இலக்கியங்களும் இன்னும் நிலைபெற்று உள்ளன.
தொழில்கள்
இவர்கள் மனத்திற்கு மிகவும் பிடித்தது கலைத் தொழில்தான். எனவே சினிமா, டிராமா, இசை போன்ற பொழுதுபோக்குத் துறைகளில், எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் இவர்களுக்கு வெற்றி நிச்சயம்! மேலும் துணிக்கடை, நகைக்டை, பிளாஸ்டிக் சாமான்கள் வியாபாரம் போன்றவையும் வெற்றி தரும். மற்ற எண்கள் 1, 5 வந்தால் அரசு அதிகாரியாகவும் பிரகாசிப்பார்கள். சிற்பம், சித்திரம் போன்ற நுணுக்கமான துறைகளிலும், அலங்காரப் பொருட்கள், கவரிங் நகை விற்பனை தயாரிப்பு ஆகியவற்றிலும் இவர்கள் வெற்றி அடையலாம். அதுமட்டுமன்று சட்ட நுணுக்கம் பேசி விவாதம் புரியும் வக்கீல்கள், நீதிபதிகள் போன்ற தொழில்களும் ஓரளவு நல்லதே! ஆனால் பணத்திற்காக வளை கொடுக்கும் இயல்பு இவர்களுக்கு உண்டு. மேலும் பெண்களுக்கு உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருட்கள், அழகு சாதனங்கள் வியாபாரமும் போன்றவையும் நன்மை தரும்.
முத்து பவளம் போன்ற நவரத்தினங்கள் வியாபாரமும் செய்யலாம். எப்போதும் பிறரின் உதவியும், மக்கள் வசியமும், இயற்கையாகவே இவர்களுக்கு உண்டு. மற்றவர்களுக்காக வீடுகள் கட்டி, அதை விற்கும் தொழில்களில் இவர்கள் ஈடுபடலாம். கண்ணாடி, வாசனைப் பொருட்கள், பூக்கள், மாலைகள், வியாபாரமும் சிறந்ததே! சங்கீதம், வாய்ப்பூட்டு, இசை வாத்தியங்கள் ஆகியவை மூலம் நல்ல பொருள்கள் ஈட்டலாம்.
இவர்கள் கலைத் துறைக்காகவே பிறந்தவர்கள். கலையின் பல துறைகளிலும் ஈடுபடுவார்கள். சிற்பம், சித்திரம், சங்கீதம் போன்ற கவின் கலைகளில் (Fine Arts) வெற்றி பெறுவார்கள். சிலர் சட்ட நுணுக்கம் பேசி பணம் அதிகம் சம்பாதிக்கும் வக்கீல்களாகவும், மருத்துவர்களாகவும் இருப்பார்கள். பெண்களின் அழகு சாதனங்கள் உற்பத்தி மிகவும் விற்பனை துறைகள் நன்கு அமையும்.பட்டு மற்றும் ஜவுளி வியாபாரம், முத்து, பவளம், வைர வியாபாரம் உகந்தவை! இசைக் கருவிகளில் ஏதாவது ஒன்றில் நாட்டம் இருக்கும்! நளினமாக நடித்துக் காண்பிக்கும் குணமும் உண்டு.
திரைப்படத் தொழில், ஒப்பனைத் தொழில், காட்சி அமைப்புகள் தயார் செய்தல் போன்றவையும் நன்கு அணியும். மதுபான வகைகள், நெல்லி, எலுமிச்சை, தானியங்கள், அரிசி, உப்பு, வாசனைப் பொருட்கள் வியாபாரம், உணவுவிடுதி, தங்கும் விடுதி (Lodge) நடத்துதல், ஜோதிடம் பார்த்தல், பசு, பால், நெய் வியாபாரம், அழகு தையல் நிலையங்கள், ஆண், பெண் அழகு நிலையங்களும் இவர்களுக்கு ஏற்றவை! Fashion Designing, Garment தொழில்களும் உகந்தவை. இயற்கையை இரசிப்பவர்கள், சிலர் மருத்துவத் துறையிலும் பிரகாசிப்பார்கள்.
Warning: Undefined array key "nurDatas" in /home/wmmgppvdsrk1/tamilsurangam.in/astrology/numerology/birth_numbers/birth_number_6ex2.html on line 88
சுக்கிரனின் யந்திரம் (சக்கரம்)
| 11 | 6 | 13 |
| 12 | 10 | 3 |
| 7 | 14 | 9 |
சுக்கிரனின் மந்திரம்
| ஹிமகுந்த ம்ருணாளாபம், தைத்யாநாம் பரமம் குரும் ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம் |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிறந்த எண் 6 - Gain of Birth Numbers - பிறந்த எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்

