நாடி ஜோதிட விதி 02 - நாடி ஜோதிட விதிகள்
ஒரு கிரகம் இருக்கும் ராசிக்கு நேர் எதிர்த் திசையில் உள்ள கிரகம் அந்தக் கிரகத்திற்குப் பாதிப்பைத் தரும்.
ஒரு கிரகம் நின்ற ராசிக்கு எதிர் திசையை குறிக்கும் ராசிகளில் உள்ள கிரகங்களோடு இணைவு பெற்று செயல்படும் (3,7,11 - ல் உள்ள கிரகன்களோடு இணைவு பெறும்)
கிழக்குத் திசைக்கு நேர் எதிர்த்திசையான மேற்குத் திசையில் உள்ள கிரகங்கள் கிழக்கு திசையில் உள்ள கிரகங்களைப் பாதிக்கு, அதுபோல தெற்கு திசையில் உள்ள கிரகங்கள் வடக்கு திசையில் உள்ள கிரகங்களைப் பாதிக்கின்றன,
உதாரணமாக, மேஷம் கிழக்கு, அதற்கு நேரெதிர்த்திசை துலாம் மேற்கு. மேஷம் நெருப்பு, துலாம் காற்று. இரண்டுமே சர ராசிகள். ஆக, இது காட்டுத்தீயைக் குறிக்கும். நெருப்பு எரியக் காற்று தேவை. இங்கு இரண்டுமே சரமானதால் காட்டுத் தீ எனக் கொள்ளலாம். இது போல் மற்ற இரண்டு வீட்டுக்கும் நீங்களே முடிவு செய்யவும்.
அடுத்து, தெற்குத் திசைக்கு நிலம் என்றும் வடக்குத் திசைக்கு நீர் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இங்கு நிலம் செழிப்படைய நீர் தேவை. இது இரண்டும் ஸ்திர ராசிகள். ஆக, ஸ்திரத்தன்மையைக் காட்டும். இதுபோன்று மற்ற ராசிகளுக்கு நீங்களே முடிவு செய்யலாம்.
மேஷம், சிம்மம், தனுசு இம்மூன்று ராசிகளும் நெருப்பைக் குறிக்கும்.
ரிஷபம், கண்ணி, மகரம் இம்மூன்று ராசிகளும் நிலத்தினைக் குறிக்கும்.
மிதுனம், துலாம், கும்பம் இம்மூன்று ராசிகளும் காற்றுவைக் குறிக்கும்.
கடகம், விருச்சிகம், மீனம் இம்மூன்று ராசிகளும் நீரைக் குறிக்கும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடி ஜோதிட விதி 02 - நாடி ஜோதிட விதிகள் - Law's of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்