ஜோதிடம் குறிப்புகள் - சிம்ம இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்!

மகம், பூரம், உத்திரம், 1-ம் பாதம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள், சூரியனைப் போன்று விளங்குவார்கள். தைரியமும், வாக்குவன்மையும் தெய்வீக தேவாலய வழிபாடுகளுடன், ஆசார அனுஷ்டானங்களிலும் சிறந்து விளங்குவர். கல்வியில் ஊக்கமும் சாஸ்திர ஆரய்ச்ச்சிகளில் தேர்ச்சியும் அடைவர். வேதங்களில் பற்றுதல் இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பும், சகவாசமும், அந்தஸ்தும் ஏற்படும்.சமூகத்தில் கீர்த்தியுடனும், பிரபலத்துடனும், விளங்குவார்கள். உன்னத்ப் பத்வியில் செல்வம், செல்வாக்கு, ஸ்திர சொத்துக்களுடன் இருப்பார்கள். குடும்பம் சிறப்புடன் இருக்கும். புத்திர பாக்யங்களுடன் வாழ்வார்கள்.
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிவபெருமான் அருளைப் பெற்று இருப்பார்கள்.அதிகமாக உணவு புசிப்பார்கள். வியாதிகள் ஏற்பட்டாலும் உடனே குணமாகும். தொழிலில் ஊக்கத்துடன் விளங்குவார்கள். தன்னுடைய அந்தஸ்துக்குக் குறைவாக இருப்பவர்களிடம் அலக்ஷியத்துடனும், அதிகாரங்களுடனும், சிறிது கர்வம் கொண்டவர்போல நடந்துகொள்வார்கள். கோபமும், படபடப்பும் தலையெடுத்திருக்கும்.
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் கிரஹ பலத்துடன் ஜாதகம் அமைந்திருந்தாஅல் 80 வயதுகளுக்குக் குறைவில்லாமல் நல்ல சுக செள கர்யங்களுடன் இருப்பார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிம்ம இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடம் குறிப்புகள் - Astrology Tips - Astrology - ஜோதிடம்