நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 47
வீடு, வாசல் எப்போது கட்ட முடியும் ?
முதலில் வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள் வாங்கும் யோகம் இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும். 4-ம் வீட்டுடன் செவ்வாய் சம்மந்தப்பட்டால் வீடு கட்டும் யோகம் இருக்கிறதென்றும், சுக்கிரன் சம்மந்தப்பட்டால் வாகன யோகம் இருக்கிறதென்றும் கொள்ள வேண்டும். அதற்குப்பிறகு எப்போது வாங்க முடியும் எனப் பார்ப்போம். 4-ம் வீடு ஸ்திர சொத்துக்க ளையும் 12-ம் வீடு Investment என்கிற முதலீட்டையும் குறிப்பதால் இந்த வீடுகளுடன் 11-ம் வீட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வீடுகளிக் குறிக்கின்ற தசா, புக்திக் காலங்களில் ஒருவர் ஸ்திரசொத்துக்கள் வாங்க முடியும்.
வாகனமும் அவ்வாறே. ஆனால் சிலர் நான் இரு சக்கர வாகனம் வாங்குவேனா ?
அல்லது நாலு சக்கர வாகனம் வாங்வேனா? எனக் கேட்ப்பார்கள். அதற்கும் நாம் பதில் சொல்ல வேண்டுமல்லவா? வாகன யோகம் இருந்து சுக்கிரன் நாலு கால் ராசிகளான மேஷம், ரிஷபம், சிம்மம், மகரம், தனுசின் பிற்பாதி ஆகியவைகளுடன் சம்மந்தப் பட்டால் அவர் நாலுகால் வாகனமான கார் வாங்குவார் எனக் கொள்ளலாம். அதை விடுத்து மிதுனம், மீனம், தனுசின் முற்பாதியுடன் சம்மந்தப் படால் இரு சக்கர வாகனம் வாங்குவர் எனக் கொள்ளலாம். இந்த ராசிகள் இரட்ட்டை ராசிகள் அல்லவா! மிதுனம் ஒரு ஆண், பெண்ணை சின்னமாகக் கொண்டிருக்கிறது அல்லவா? மீனம் இரட்டை மீன்களை சின்னமாகவும், தனுசு வில், அம்பை சின்னமாகவும் கொண்டுள்ள தால் இவை இரட்டை ராசிகளென்று அழைக்கப்படுகின்றன.
சில முக்கியமான கேள்விகளுக்கு எந்தெந்த வீட்டை வைத்துப் பார்க்க வேண்டுமென எழுதியுள்ளோம். இதை அடிப்படியாக வைத்துப் பலன் சொல்லி வாருங்கள். நீங்கள் புரியும் தவறுகள் உங்களுக்கே தெரிய வரும். தவறைத் திருத்திக் கொண்டால் ஒரு நம்பகரமான ஜோதிராகப் பரிமளிக்க முடியும்.
நமது பாரமபரிய ஜோதிடத்தில் கிரகங்களின் பலத்தைக் கணிக்க “ஷட்பலம்” என்ற முறையைக் கையாளுகின்றனர். இது மிகவும் கடினமானதும், துல்லியமான கணிதத்தைக் கொண்டதுமாகும். இது நடைமுறைக்குக் சிரம்மானதுமென்றும் கூறலாம். இதைப் பற்றி நாம் அதிகம் எழுதப் போவது இல்லை. இருப்பினும் இது என்னவென்று தெரிந்து கொள்வோம். ஷட்பலமானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. ஸ்தான பலம்
2. கால பலம்
3. அயன பலம், கிரக யுத்த பலம்
4. நைசிர்கிக பலம்
5. திக்குப் பலம்
6. சேஷ்டாபலம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 47 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - You can become a Astrologer! - Astrology - ஜோதிடம்