மருதகாசி பாடல்கள் - பக்கம் - 178

| மனித னெல்லாம் தெரிந்து கொண்டான்! வாழும் வகை புரிந்து கொண்டான்! இருந்த போதும் மனிதனுக்கு ஒன்றுமட்டும் புரியவில்லை மனிதனாக வாழமட்டும், மனிதனுக்கு தெரியவில்லை. (மனிதனெல்லாம்) இனிய குரலில் குயில் போலே இசையும் அழகாய்ப் பாடுகிறான்! எருதுகள் போலே வண்டிகளை இழுத்துக்கொண்டு ஓடுகின்றான்! வனத்தில் வாழும் பறவைகள் போல் வானில் பறந்து திரிகின்றான் மனிதனாகவாழ மட்டும் மனிதனுக்கு தெரியவில்லை (மனிதனெல்லாம்). சாரமில்லா வாழ்க்கையிலே சக்கரம் போலே சுழலுகிறான்! ஈரமண்ணால் பல உருவை இறைவனைப் போலே படைக்கின்றான்! நேரும் வளைவு நெளிவுகளை நீக்கி ஒழுங்கு படுத்துகிறான்! மனிதனாக வாழமட்டும் மனிதனுக்குத்தெரியவில்லை (மனிதனெல்லாம்) கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தைச் சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்! குள்ள நரிபோல் தந்திரத்தால் குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்! வெள்ளிப் பணத்தால் மற்றவரை விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான் ! மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரிய வில்லை (மனிதனெல்லாம்) |
அழகுநிலா-1962
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 176 | 177 | 178 | 179 | 180 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 178 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கொண்டான், போலே, மனிதனெல்லாம், மனிதனுக்கு, தெரிந்து, மனிதனாக

