மருதகாசி பாடல்கள் - பக்கம் - 158

சுயநலம் பெரிதா? பொது நலம் பெரிதா?-இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா மதி மயக்கத்திலே வரும் தயக்கத்திலே மனம் தடுமாறித் தவிக்கும் மனிதா-இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா! (சுயநலம்) துன்பம் இல்லாமலே இன்பம் உண்டாகுமா? அன்பு இல்லாத இதயம் இதயமா? நல்ல தேமாங்கனி என்றும் வேம்பாகுமா-இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப்பாரடா (சுயநலம்) நாம் தேடாமலே வந்த செல்வம் என்றால் அதைத் தெரு மீது வீணே எறிவதா? தென்றல் புயலாவதா?-உள்ளம் தீயாவதா? இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப்பாரடா (சுயநலம்) |
யார் பையன்-1957
இசை: S, தட்சிணாமூர்த்தி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 156 | 157 | 158 | 159 | 160 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 158 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - தன்னை, உண்மை, சொல்லின், சுயநலம்