மருதகாசி பாடல்கள் - பக்கம் - 140

(பல்லவி)
எல்லாம் திரை மறைவே--உலகில் எல்லாம் திரை மறைவே கல்வி இருந்தென்ன கற்பனை இருந்தென்ன கண்டு ரசிக்க கண்களில்லாதவர்க்கு -(எல்லாம்) கற்றுக் கொடுக்காத கவி வானரின் புலமை கஞ்சத் தனமுடையோன் காக்கும் பணப் பெருமை கவைக்குதவாப்படிப்பு உணர்ச்சியில்லா நடிப்பு கதிரவன் ஜோதி முன்னே குடத்தில் இட்ட விளக்கு -(எல்லாம்) ஆடம்பரம் இல்லா அறிவாளி நாவன்மை அவனியை உருவாக்கும் தொழிலாளி கைவன்மை நாடிக்கடல் கலந்த நதிநீரின் நல்ல தன்மை நன்றியில்லா தவர்க்கு நல்லவர் செய்த நன்மை -(எல்லாம்) |
பிறந்த நாள்-1982.
இசை: K. V. மகாதேவன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 138 | 139 | 140 | 141 | 142 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 140 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - எல்லாம்