மருதகாசி பாடல்கள் - பக்கம் - 139

இது தான் உலகமடா!-மனிதா இது தான் உலகமடா!-பொருள் இருந்தால் வந்து கூடும்-அதை இழந்தால் விலகி ஒடும்! உதைத்தவன் காலை முத்தமிடும்! உத்தமர் வாழ்வை கொத்தி விடும்! உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும் வளர்த்தே அறிவை மாய்த்து விடும்! பொருள்-இருந்தால் வந்து கூடும்! அதை இழந்தால் விலகி ஓடும்! (இது) உழைப்பவன் கையில் ஒடு தரும்! உணவுக்குப் பதிலாய் நஞ்சைத் தரும்! பழியே புரியும் கொடியோன் புசிக்க பாலும் பழமும் தினம் தேடித் தரும்! பொருள்-இருந்தால் வந்து கூடும்! அதை இழந்தால் விலகி ஓடும்! (இது) மெய்யைப் பொய்யாய் மாற்றி விடும்! வீணே சிறையில் பூட்டி விடும்! பொய்யும் புரட்டும் நிறைந்தவன் தன்னை புகழ்ந்தே பாடல் புனைந்து விடும்! பொருள்-இருந்தால் வந்து கூடும்! அதை-இழந்தால் விலகி ஒடும்! |
பாசவலை-1956
இசை: எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்: C. S. ஜெயராமன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 137 | 138 | 139 | 140 | 141 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 139 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - விடும், விலகி, இழந்தால், கூடும், இருந்தால், வந்து, பொருள், தரும்