மருதகாசி பாடல்கள் - பக்கம் - 134

மதியாதார் வாசல் மதித்தொருக்கால் சென்று மிதியாமை கோடி பெறும். என்ற மதி சொன்ன ஒளவை மொழி தன்னைப் போற்றி வாழ்வதே பெருமை தரும்! மண்மீது மானம் ஒன்றே ப்ரதானம் என்றெண்ணும் குணம் வேணும்-இதை மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம் மாறாத அவமானம்! - (மண்) கண்ணான கணவன் தன்மானம் தன்னைக் காப்பாற்றும் பெண் தெய்வம்-மனம் புண்ணாகி சிந்தும் கண்ணிரைக் காண பொறுக்காதடா தெய்வம்: எண்ணாத இன்பம் எது வந்த போதும் எதிர் கொள்ளத் தயங்காதே! எளியோருக்காக நீ செய்த த்யாகம் இதை லோகம் மறவாதே! (மண்) அழியாத இன்பம் புவியோர்கள் எண்ணும் பணங் காசிலே இல்லை-மெய் அன்பே எந்நாளும் அழியாத இன்பம் அதற்கிடு வேறில்லை! . |
சதாரம்-1956
இசை: G. ராமநாதன்
பாடியவர்: திருச்சி லோகநாதன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 132 | 133 | 134 | 135 | 136 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 134 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - இன்பம்