மருதகாசி பாடல்கள் - பக்கம் - 102
கெஜல்
உறவும் உண்டு! பிரிவும் உண்டு உலகிலே! வரவும் உண்டு! செலவும் உண்டு வாழ்விலே! |
பாட்டு
நீயும் நானும் இங்கு வாழும் வாழ்க்கையொரு கூட்டல் கணக்குத்தான்?-எப்போதும் கூட்டல் கணக்குத்தான்? கழித்த்ல் என்பதே இனி அதில் இல்லை! பெருக்கல் என்பதுதான் அதன் எல்லை! இருக்கும் வரையிலும் இருவர் வாழ்விலும் கூட்டல் கணக்குத்தான்!-எப்போதும் கூட்டல் கணக்குத்தான்! |
கெஜல்
நெஞ்சம் நினைப்பதற்கே! இளமை ரசிப்பதற்கே! கனிகள் சுவைப்பதற்கே! கைகள் கொடுப்பதற்கே: |
பாட்டு
துள்ளித் துள்ளியிங்கு துடிக்குது மனசு! கிள்ளிக் கிள்ளி நெஞ்சைக் கிளறுது வயசு! அள்ளி அள்ளி நான் தருவேன் பரிசு! கூட்டல் கணக்குத் தான்-எப்போதும் கூட்டல் கணக்குத்தான்!(நீயும்) |
தாய் மீது சத்தியம்-1978
இசை : சங்கர், கணேஷ்
பாடியவர்: P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 100 | 101 | 102 | 103 | 104 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 102 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கூட்டல், கணக்குத்தான், உண்டு, எப்போதும்