விலங்கியல் :: சூழ்நிலையியல்
31. வேற்றின இணைவாழ்வு என்றால் என்ன?
வேறுபட்ட வகைகளைச் சார்ந்த இரு விலங்குகள் ஒரு சேர வாழ்தல். இச்செயல் ஒன்றுக்கு நன்மை. மற்றொன்றுக்கு ஏற்போ இழப்போ இல்லை எ-டு. துறவி நண்டின் ஒட்டில் கடலனிமோன் இணைந்து வாழ்தல்.
32. சமச்சீர் என்றால் என்ன?
தாவரப்பூவும் விலங்குடலும் ஒரு தளத்தில் அமைந் திருக்கும் முறை.
33. இதன் வகைகள் யாவை?
1. இருபக்கச் சமச்சீர் - மீன்.
2. ஆரச்சமச்சீர் - நட்சத்திர மீன்.
34. ஆரச்சமச்சீர் என்றால் என்ன?
ஒரு பொதுமையத்தைச் சுற்றியமைந்துள்ள ஒத்த பகுதிகளை எச்செங்குத்துக்கோட்டில் வெட்டினாலும், அவற்றை இரு சமபகுதிகளாகப் பிரிக்கலாம். எ-டு. நட்சத்திரமீன்.
35. ஆரச்சமச்சீரிகள் என்றால் என்ன?
ஆரச்சமச்சீருடைய விலங்குகள். எ-டு குழிக் குடலிகள், முட்தோலிகள்.
36. ஆரம் விலகியது என்றால் என்ன?
ஆரச்சமச்சீருடைய வாய்க்கு எதிரே உடல் மேற்பரப்பு அமைதலைக் குறிப்பது.
37. புவிவளரியல் ஊழிகள் யாவை?
1. புத்துழி - 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
2. இடையூழி - 65-225 மில்லியன் ஆண்டுகள்.
3. தொல்லூழி - 570 - 225 மில்லியன் ஆண்டுகள்.
4. முன்தொல்லுழி - 4600 - 2500 மில்லியன் ஆண்டுகள்.
38. கேம்பிரியன் ஊழி என்றால் என்ன?
தொல்லூழியின் தொடக்கப் புவி வளரியல் காலம். 570 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது. 100 மில்லியன் ஆண்டுக்காலம்வரை நிலவியது. இக்காலத்தில் வாழ்ந்த தொல்லுயிர்ப் படிவங்கள், கடல் உயிர்களாலானவை.
39. டிவோனியன் ஊழி என்றால் என்ன?
தொல்லுயிர் சார்ந்த புவிவளரியல் காலம்.395 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இக்காலப் பாறைகளில் மாசிகள், மீன்கள் ஆகியவற்றின் புதைபடிவங்கள் புதைந்துள்ளன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூழ்நிலையியல் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், மில்லியன், என்ன, ஆண்டுகள், ஆண்டுகளுக்கு, முற்பட்டது