இயற்பியல் :: கதிர்வீச்சு - பக்கம் - 6
51. கரும்பொருள் கதிர்வீச்சு என்றால் என்ன? கரும்பொருளிலிருந்து குறிப்பிட்ட வெப்பநிலையில் வெளியேறும் கதிர்வீச்சு.
52. கருவொளி என்றால் என்ன?
ஒளிர்பொருள்களில் விழும் புறஊதாக் கதிர்கள். இவை புலப்படா ஒளியாகும்.
53. கரிக்காலக் கணிப்பு என்றால் என்ன?
தொல்பொருள்களின் வயதைக் கரி-14ன் அடிப்படையில் உறுதிசெய்தல்.
54. காலக்கணிப்பு நுட்பங்கள் யாவை?
தொல்லுயிர்ப்படிவங்கள், தொல்பொருள் படிவங்கள், பாறைகள் ஆகியவற்றின் வயதை உறுதி செய்யும் முறைகள். இதை உருவாக்கியவர் பிராங்க் லிபி, 1947.
55. இம்முறையின் இருவகைகள் யாவை?
1. சார்புக் காலமறி நுணுக்கம் - மற்ற மாதிரிகளோடு ஒப்பிட்டு ஒரு மாதிரியின் வயதை உறுதிசெய்தல்.
2. சார்பிலாக் காலமறி நுணுக்கம் - நம்புமையுள்ள கால அளவைக் கொண்டு வயதை உறுதி செய்தல்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கதிர்வீச்சு - பக்கம் - 6 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வயதை, என்ன, என்றால்