இயற்பியல் :: கதிர்வீச்சு - பக்கம் - 5
41. விண்கதிர்கள் என்றால் என்ன?
விண்வெளியிலிருந்து தோன்றுங் கதிர்கள்; குறிப்பிடத் தக்க மாற்றங்களை உண்டாக்குபவை. இவை வானவெளிப் பயணத்திற்குத் தடையாக இருப்பவை. இவற்றைச் செயற்கை நிலாக்கள் பல ஆராய்ந்த வண்ணம்
உள்ளன. இன்னும் இவை முழுமையாக ஆராயப்படாத கதிர்களே.
42. விண் பின்னணிக் கதிர்வீச்சை ஆராய அனுப்பப்பட்ட செயற்கைநிலா யாது?
விண்பின்னணி ஆராய்வி (COBE). 1980இல் ஏவப்பட்டது இக்கதிர்வீச்சில் அலைகள் உள்ளன, 1992.
43. ஹபிள் வானத்தொலைநோக்கி எப்பொழுது ஏவப்பட்டது? ஏன்?
விண்ணகத்தை விரிவாக ஆராய 1990இல் ஏவப்பட்டது.
44. வன்கதிர்வீச்சு என்றால் என்ன?
மீயாற்றல் ஒளியன்களைக் கொண்ட கதிர்வீச்சு. ஒளித்துகள்களே ஒளியன்கள் ஆகும். உலோகங்கள் உள்ளிட்ட எல்லாப் பொருள்களிலும் ஊடுருவ வல்லவை.
45. ஆற்றல் வளங்கள் யாவை?
நிலக்கரி, மின்சாரம் முதலியவை. இவை பெருந்தொழில் வளங்களாகும்.
46. செந்தழல்மானி என்றால் என்ன?
கதிர்வீச்சு விதிகளைப் பயன்படுத்தித் தொலைவிலுள்ள மீவெப்பநிலைகளைப் பதிவு செய்யும் கருவி.
47. செந்தழல் அளவை என்றால் என்ன?
செந்தழல் மானியைக் கொண்டு கதிர்வீச்சு உமிழும் உயர்வெப்பநிலைகளை அளப்பது.
48. செந்தழல் நோக்கி என்றால் என்ன?
கதிர்வீச்சு வெப்பத்தின் செறிவை அளக்கப் பயன்படுங் கருவி.
49. செந்தழல் மின்விளைவு என்றால் என்ன?
சில படிகங்களைச் சமமற்ற நிலையில் சூடாக்கும் பொழுது அல்லது குளிர்விக்கும்பொழுது மின்னேற்றங்களை உண்டாக்குதல்.
50. கரும்பொருள் என்றால் என்ன?
எல்லாப் படுகதிர்வீச்சுகளையும் உறிஞ்சும் பொருள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கதிர்வீச்சு - பக்கம் - 5 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கதிர்வீச்சு, செந்தழல், ஏவப்பட்டது