மருத்துவம் :: அறிமுகம்
41. தொலை மருத்துவம் என்றால் என்ன?
தொலைபேசி, மின்னஞ்சல், தொலைக்காட்சி ஆகிய கருவிகளை மருத்துவப் பயன்களுக்குப் பயன்படுத்தல். நோயாளிகளுக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கவும் மருத்துவர்களும் தங்களுக்குள் முன்னேற்றக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளலாம். உலகத்தில் ஒரு பகுதியில் இருப்பவர் மற்றொரு பகுதியில் இருப்பவ ரோடு இம்முறையில் தொடர்பு கொண்டு செய்திகளைத் தெரிவிக்கலாம். வானவெளித் தொழில் நுட்பவியல் சார்ந்த ஒரு பயன்.
42. தற்கால உட்கூறியலின் தந்தை யார்?
ஆண்ட்ரியஸ் வெசாலியஸ் (154-1564), பெல்ஜிய மருத்துவர்.
43. கேலன் என்பவர் செய்த அரும்பணி யாது?
கேலன் என்பார் கி.மு. 2இல் வாழ்ந்த உட்கூறியலார். மனித உடலை அறுத்துப்பார்க்க உரோம விதி இடம் தரவில்லை. ஆகவே, இவர் ஆடு, எருது, நாய், கரடி, குரங்கு முதலியவற்றை அறுத்துப் பார்த்து ஆராய்ந்தார். எனவே, எலும்புகளில் சில தவறுகளும் இருந்தன. இவர் சிறந்த நூல் உட்கூறியல் தயாரிப்புகள். இது 1400 ஆண்டுகள் உடல் நூல் படிப்புக்குச் சிறந்த பாட நூல். வியத்தகு பணியாளர் என்று பெயர் பெற்றவர்.
44. மருத்துவ உலகின் மாபெரும் தந்தை யார்?
இப்போகிரடிஸ். கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மருத்துவர்.
45. எதன் மூலம் இவர் நம் நினைவுக்கு வருகிறார்?
இவர் பெயரில் அமைந்த உறுதி மொழி மூலம். இன்றும் மருத்துவப் பட்டம் பெறுபவர்கள், இவ்வுறுதி எடுத்துக் கொள்கின்றனர்.
46. மருத்துவத்திற்காக முதன்முதலில் நோபல் பரிசு பெற்றவர் யார் ?
1901இல் வான் பெரிங் என்னும் ஜெர்மானிய முதன் முதலாக நோபல் பரிசு பெற்றார்.
47. மருத்துவத்துறை வளர உதவிய நான்கு சிறந்த கண்டுபிடிப்புகள் யாவை?
1. அம்மை குத்துதல்.
2. குருதி ஒட்டம்.
3. வைட்டமின்கள்.
4.புரைய எதிர்ப்பிகள்
ஆகிய நான்கும் கண்டுபிடிக்கப்படுதல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அறிமுகம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இவர், நூல், சிறந்த