மருத்துவம் :: அறிமுகம்
1. மருத்துவம் அல்லது மருத்துவ அறிவியல் என்றால் என்ன?
நோய்களைப் போக்கி உடல் நலம் பேணும் கலையே மருத்துவம் ஆகும்.
2. மருத்துவத்திலுள்ள ஐந்து முறைகள் யாவை?
1. அயற்பண்டுவம் என்னும் அலோபதி.
2. ஒரியல் பண்டுவம் என்னும் ஓமியோபதி.
3. ஆயுர் வேதம்.
4. யுனானி.
5. சித்த மருத்துவம்.
இவற்றில் முதல் முறை ஆங்கில முறை. நான்காவது அரபு முறை. ஏனைய மூன்றும் நம் நாட்டிற்குரியவை.
3. அயற்பண்டுவம் என்னும் சொல்லை உருவாக்கியவர் யார்?
அனிமன் என்பார் (755-1843) இச்சொல்லை ஆங்கிலத்தில் உருவாக்கினார்.
4. அயற்பண்டுவம் என்றால் என்ன?
இது ஒரு நோய் நீக்கு முறை. குணமாக்கு நிலைக்கு எதிரான நிலைமை இதில் உருவாக்கப்படுகிறது. இதைச் செய்பவர் அயற்பண்டுவர்.
5. ஒரியல் பண்டுவம் (ஓமியோபதி) என்றால் என்ன?
இது ஒரு நோய் நீக்குமுறை. இதில் பண்டுவம் செய்யப் படும் நோய்க்குரிய அறிகுறிகளை இயல்பான உடல் நலமுள்ளவரிடம் உண்டாக்குவதற்குரிய மருந்துகள் சிறிய அளவில் செலுத்தப்படும். இம்முறையை உருவாக்கியவர் அனிமன் ஆவார்.
6. மருத்துவத்தின் இரு பெரும் பிரிவுகள் யாவை?
பொது மருத்துவம், அறுவை மருத்துவம்.
7. மருத்துவத்தின் பெரும் பிரிவுகள் யாவை?
1. இதயவியல்
2. நரம்பியல்
3. முடநீக்கியல்
4. உட்கூறியல்
5. கண்ணியல்
6. காதுமூக்கு தொண்டை
7. மகளிர் நோய்
8. குழந்தை மருத்துவம்
9. மூப்பியல்
10. கருவியல்
11. மருந்தியல்
12. உளமருத்துவம்
13. உணர்வகற்றியல்
14. பதிய அறிவியல்
15. பல் மருத்துவம்
ஒரு பெரிய மருத்துவமனை இவை அனைத்தையும் கொண்டிருக்கும்.
8. மருத்துவத்தின் துணைப்பிரிவுகள் யாவை?
1. வானப் பயண மருத்துவம்
2. மனை மருத்துவம்
3. அவசர மருத்துவம்
4. சூழ்நிலை மருத்துவம்
5. ஆய்வுநிலை மருத்துவம்
6. குடும்ப மருத்துவம்
7. தடயவியல் மருத்துவம்
8. அணுவியல் மருத்துவம்
9. உள உடல் மருத்துவம்
10. விளையாட்டு மருத்துவம்
11. வெப்பமண்டல மருத்துவம்
12. கால்நடை மருத்துவம்
13. தடுப்பு மருத்துவம்
9. வானப்பயண மருத்துவம் என்றால் என்ன?
வானப் பயனத் தொடர்பாகவுள்ள சிச்கல்களை ஆராய்வது. இவை உடலியல், மருத்துவம், உளவியல், நோய் இயல் ஆகிய துறைகள் தொடர்பானவை.
10. மனைமருத்துவம் என்றால் என்ன?
நோயாளியின் நோய்களை நேரடியாக ஆராய்வது.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அறிமுகம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மருத்துவம், என்ன, என்றால், யாவை, முறை, நோய், மருத்துவத்தின், அயற்பண்டுவம், உடல், என்னும், பண்டுவம்