கணிதம் :: கணிதத் துறைகள்
41. கணக்கு அறிவியல் (maths science) என்றால் என்ன?
அறிவியலைக் கணக்கு முறையில் ஆராயும் புதிய அறிவுத் துறை. குறிப்பாகக் கொள்கை நிலை இயற்பியலை ஆராய்வது. இதில் கணித மேதை இராமானுஜத்தின் பங்குக் குறிப்பிடத்தக்கது. இதில் அல்லாடி கிருஷ்ண சாமியும் வல்லவர்.
42. புள்ளியியல் என்றால் என்ன?
ஆய்வுகள் செய்யத் திட்டமிடும் முறைகள். தகவல் பெறுதல், அதைப் பகுத்தல், அதிலிருந்து முடிவுகளைப் பெறல், பகுப்பின் அடிப்படையில் முடிவு காணச் செய்தல் ஆகியவை பற்றியது. இதன் உய்மானத்தில் மாதிரிப் பகுப்பிலிருந்து மக்கள் தொகை பற்றிய முடிவுகள் உய்மானமாகக் கொள்ளப்படுகின்றன. வண்ணனைப் புள்ளியியலில் தகவல் தொகுக்கப்படும் உய்மானமில்லை.
43. இட வடிவியல் என்றால் என்ன?
இடவடிவப் பண்புகளை ஆராய்வது.
44. மட்டுக் கணிதம் என்றால் என்ன?
மட்டுகளை ஆராய்வது.
45. நிகழ்தகவு என்றால் என்ன?
ஒரு நிகழ்ச்சி ஏற்படுவதற்குரிய வாய்ப்பை ஆராய்வது.
46. கணிதத்தின் தாக்கம் யாது?
20 ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கணக்கு வளர்ச்சியாலேயே ஆகும். தொகையீட்டு வகை நுண்கணிதம் என்னும் கணிதப் பிரிவு இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறிஇயல், வானியல், புவி வளரியல், வானவெளி அறிவியல் முதலிய துறைகளில் உருவான பல சிக்கல்களைத் தீர்க்க ஆற்றல் வாய்ந்த கருவியாக உள்ளது. அண்மைக் காலத்தில் கணிதம் சமூக அறிவியல்களிலும் பெருத்த முன்னேற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
47. கணிதமும் தர்க்கமும் எவ்வாறு தொடர்புடையவை?
கணக்கு தருக்க அடிப்படையில் அமைந்தது. பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட கூற்றுகளைக் கொண்டு முடிவுகள் செய்து, கணக்கு முறைகளை கணித மேதைகள் உருவாக்கினர்.
48. கணிதமும் அதனோடு தொடர்புடைய துறைகளும் யாவை?
தந்தை அறிவியல் மெய்யறிவியல். தாய் அறிவியல் கணக்கு இவ்விரண்டின் வழிவந்தவையே ஏனைய எல்லா அறிவியல்களும். அவ்வகையில் கணிதத்தோடு தொடர்புடைய துறைகளாவன:
1. வானியல். 2. இயற்பியல். 3. வேதிஇயல் 4. புள்ளி இயல். 5. தொழில்நுட்பவியல் - வானவெளி அறிவியல். அடிப்படைக் கணிதம், பயன்படு கணிதம் ஆகிய இரண்டும் இன்று ஆதிக்கம் செலுத்தாத துறைகள் இல்லை எனலாம்.கொள்கையளவில் மெய்யறிவியலோடும் தர்க்கத்தோடும் கணிதம் தொடர்புடையது.
49. கணிதத் தொகுத்தறிதல் என்றால் என்ன?
தனித்தனி விபரங்களிலிருந்து குறிப்பிட்ட ஒரு பொது விதியைக் கண்டுபிடிக்கும் முறை. இதன் முடிவு உண்மை யாகவோ பொய்யாகவோ இருக்கலாம். எ.டு. 135, 245, 1320 என்னும் எண்கள். 5 ஆல் வகுக்கப்படும் எண்களாகும்.
50. கணிதத் தொகுத்தறிதல் வரலாறு யாது?
இப்பெயரை அகஸ்டல் டிமார்கன் (1809-1871) என்னும் ஆங்கிலக் கணக்கு மேதை முதன்முதலில் தம் தொகுப்பறி கணிதம் என்னும் கட்டுரையில் 1838 இல் அறிமுகப்படுத்தினர். கணிதத் தொகுத்தறி விதிக்கு முன்ன்ோடி இத்தாலிய கணிதமேதை பிரான்ஸ் செங்கோமெராலிகல் (1494 -1575) என்பவராவார். இந்தியக் கணிதமேதை பாஸ்கரர் (கி.பி.1153) என்பவர் இம்முறையை தம் படைப்புகளில் பயன்படுத்தினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணிதத் துறைகள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கணக்கு, கணிதம், என்ன, என்றால், அறிவியல், ஆராய்வது, என்னும், கணிதத்